Tuesday, January 3, 2012

பெண்களுக்கு இஸ்லாம் தரும் உரிமைகள்..

இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு இஸ்லாம் தரும்  உரிமைகள் பல அதில் சில ....

கல்வி பெற உரிமை மற்றும் அது அவர்கள் கடமை.

தமது சொந்த சுயாதீன சொத்து உரிமை.

அவர்கள்
விரும்பினால் தங்கள் தேவைக்கு  பணம் சம்பாதிக்கவும் வேலை தேடிக்கொள்ளவும் சேமித்துக் கொள்ளளவும் உரிமை வழங்கப் பட்டுள்ளது

சம செயல்களுக்காக பரிசு என்ற சமத்துவ அந்தஸ்து  

 தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும்  மற்றும் அதனைக்  கேட்கவும் உரிமையுண்டு

அனைத்து அவள் தேவைகளையும் கணவரிடமிருந்து கேட்கும்  உரிமை.

தனது  திருமணம் பற்றி  பேச்சுவார்த்தை நடத்த உரிமை.



''கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'' என்ற இக்கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் நியாயமான காரணங்கள் இருந்தால் ஷரீஅத் சட்டத்தின்படி விவாகரத்து பெறலாம் என்று அனுமதிக்கிறது.

தகுந்த காரணமின்றி விவாகரத்து கேட்கும் ஒரு பெண் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பெண்களுடைய உரிமை சம்பந்தமாக எழும் வழக்குகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெண் நீதிபதி இருக்க வேண்டும் என்று இமாம் அபூஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒரு ஆணைப்போல ஒரு பெண் விவாகரத்து சொல்வதற்கு உரிமைகள் குறைவாக தரப்பட்டிருப்பதின் காரணம் பெண்கள் பொதுவாக உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவு எடுப்பவர்கள், பிறகு அதற்காக வருந்துபவர்கள்.

தன் சொந்த பணத்தை (சொத்தை)தான் வைத்துக்  கொள்ள உரிமை. அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும்
பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை
 அவரது கணவரிடமிருந்து    பாலியல் திருப்தி பெற உரிமை.
பாலியல் சக்தியற்ற கணவரிடமிருந்து பிரிந்து விட உரிமை. 

விவாகரத்து  பெற்றால் அவர்களின் குழந்தைகள் தங்களின் பாதுகாப்பில் வைத்து நல்ல முறையில் வைத்து வளர்க்கும் உரிமை 

மணமகனை தேர்ந்தெடுத்து    திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்பாத
மணமகனை மணமுடிக்க மறுப்பதும் அவளுக்கு உரிமையுண்டு. கட்டாய திருமணம் அனுமதிக்கப் படவில்லை.
 

No comments: