
Thursday, January 12, 2012
ஆரோக்கியமான நெடு நாள் வாழ்வின் வழி.
பல ஆய்வுகள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள் நீண்ட காலம் வாழ்வதாக
தெரிவிக்கின்றன. விவாகரத்து செய்து கொண்டவர்களுக்கும் திருமணம் செய்து
கொள்ளாதவர்களுக்கும் வாழ்வில் நிம்மதியற்ற நிலை அடைந்து மன அமைதி இல்லாமல்
வாழும் வாழ்வும் குறைவாகி விடுகின்றது.
ஜப்பான் ஒகினோவன் மக்கள்
ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. இவர்கள்
வயதாகிவிட்டது என்ற காரணம் காட்டி ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து
தங்கள் உடல் உழைப்பை முக்கியமாக விரும்பி செயல்படுத்துகின்றனர். காய் கரி மீன் இவைகளை அதிகமாக விரும்பி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். தாங்கள்
நீண்ட ஆண்டுகள் வாழப் போவதாக நம்புகின்றனர். அதற்கு ஏற்றதுபோல் உடல்
நலத்தினை பாதுகாக்க அணைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். எண்ணமே
வாழ்வு.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment