Tuesday, January 24, 2012

மனிதனது தேவைக்காகவே மற்றவைகள்..


 “நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)

. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
 –குர்ஆன்:17:70

 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
 –குர்ஆன் : 2:29.

 இறைவன் படைப்பில் அனைத்தும் உயர்வானதாக இருப்பினும்  மனித படைப்பு மேன்மையானதாக  உள்ளது. மனிதனது  தேவைக்காகவே மற்றவைகள் படைக்கப்பட்டன.

3 பவுண்ட் மனித மூளையின்  ஆற்றலில்லாமல் எதுவும் முறையாக இயங்காது. 12,000 மில்லியன் செல்களை உள்ளடக்கிய இவைகளே உணர்வு, மகிழ்வு, சிரிப்பு மற்றும் பல உணர்சிகளால்  உந்தப்பட்டு கண்ணீர் மற்றும் அனைத்துக்கும் தொடர்பினை உண்டாக்கி மனிதனை உந்தச் செய்கின்றது. மனித மூளை  முறையாக செயல்படுத்தப்படவும், அறிவு ஆற்றலை பெருக்கிக் கொள்ளவும் இந்த நரம்பு மண்டலங்கள் உதவி செய்கின்றன.

 நினைவை நிறுத்திக் கொள்ளும் விதம் பலவிதமாக இருக்கலாம். உடன் நிகழ்ந்தவை ,சற்று முன் நிகழ்ந்தவை மற்றும் கடந்த காலங்களில் நிகழ்ந்தவை என்று  வகைப்படுத்தப்படலாம்.

 நினைவை நிறுத்திக்கொள்ளும்  ஆற்றலிலும் அறிவைப் பெறும் திறமைகளிலும் மனிதருக்குள் வித்தியாசம் இருக்கவே செய்கின்றது. சிலர் மனனம் செய்து அதனை மனதில் நிறுத்திக் கொள்வதில் சிறப்பாகவும், சிலர்  ஆக்கப் பூர்வமாக தானே சிந்தனை செய்வதில்(Creative Knowledge)  வல்லவராகவும் இருப்பார்கள். இதன் உண்மையான காரணத்தினை நம்மால் அறிந்துக் கொள்வது கடினமாகவே உள்ளது. இது பரம்பரை மரபின் காரணமாக வந்தவை என்றும் சொல்வார்கள். எது எப்படி இருப்பினும் இளமையில் கற்பது  இதற்கு துணை செய்யலாம். இளமையில் கற்கும் கல்வி அடிப்படையானது. இளமையில் கற்பது அனைத்திற்கும் அஸ்திவாரம் போன்றதாகும் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் திரும்பத் திரும்ப முயன்று அந்த கற்கும் கலையினை  தன் வயப்படுத்திக் கொள்வதில் வெற்றி பெற வாய்ப்புண்டு       

இறைவன் மனிதனை வெறும் விளையாட்டுக்காக படைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு திறமையை கொடுத்தே இருக்கின்றான். அதனை அவன் தனது தொடர்ந்த முயற்சியால் தனக்கு கொடுக்கப் பட்ட ஆற்றலை கண்டறிந்து அதனை மேன்படுத்திக் கொள்வது மனிதனிடமே இறைவன் தந்துள்ளான்.

'கவிஞன் பிறக்கிறான் பேச்சாளன் உருவாக்கப் படுகின்றான்' என்று சொல்வார்கள். ஆனால் அத்தனைக்கும் அறிவு, கல்வி முயற்சி அடிப்படை தேவையாக உள்ளது. முறையாக கல்வி கற்காதவர் எதிலும் சிறப்படைய முடியாது.


மார்க்க ஞானம்  பெறுவது உயர்வாக உள்ளது. அந்த மார்க்க ஞானம் பெறுவதற்கும் ஒரு இடம் தேவைப்படுகின்றது. அதற்காக தன் பங்கினை தந்தோர் ஏராளம் . (அதில் ஒன்றாக சிறப்பாக செயல்பட்டு வரும்   
நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் நூற்றாண்டு விழா(அரபிக் கல்லூரி) இந்த வருடம்  நூற்றாண்டு விழாவினைக் மகிழ்வாக கொண்டாட உள்ளது பெருமிதத்தினைத்  தருகின்றது) ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா! . 

மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:
i). நிலையான தர்மங்கள்
ii). பயன் தரும் கல்வி
iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)மார்க்க ஞானத்தினை கற்றுக் கொடுப்போர் மைக் போட்டு சப்தத்தினை பெருக்கி சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த அறிவினைத் தருவோர் தான் பக்குவமடைந்தவராகவும், நல்ல நடத்தையுள்ளவராகவும் இருந்து தன்னிடம் கல்வி பெறும் மாணவர்களை தன்னைச்  சூ அமர வைத்து அமைதியான முறையில்,கனிந்த வார்த்தைகளைக் கொண்டு   மென்மையான  ஆழமான கருத்துகளை மாணவர்களின் மனதில் பதிய வைப்பதுடன் தானும் அவர்கள்
னதில் காலத்தால் மறையாத நிறைவான நினைவில் பதிந்து விடுகின்றனர்.


 நாயகப் பெருந்தகை விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
“அறிஞன் ஒருவனின் பேனாவிலுள்ள ஒரு துளி மை, வீரமரணம் எய்தியவனின்; இரத்தத்தை விடத் தூய்மையானது.”

“கல்வி செல்வத்தை விடச் சிறந்தது:  ஏனென்றால் கல்வி உங்களுக்குப் பாதுகாவல் தருகிறது: செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று ஹல்ரத் அலீ (ரலி) கூறியிருக்கிறார்கள்.

 “(நபியே) ஓதுவீராக! உம்முடைய ரப்பு தயாளமானவன் – அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.  மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக் கொடுத்தான்.” (96:3,4.5)

"யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணு போது",
96 சூரத் அல் -´அலக்´ (தி கிளாட் ) –குர்ஆன்
     

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails