أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
பிறரின் கவனத்தின் மையமாக இருக்க நாடுவதினாலும், பிறரை மகிழ்விக்க
முயற்சி செய்வதினாலும், உங்கள் வாழ்வின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை
நீங்கள் இழக்கிறீர்.
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; திருக்குர்ஆன்: 28:83
ஒரு கவிஞர் கூறினார்:
“யார் பிறரை பின்பற்றுவதிலும், தலைமைக் கொள்ளாமல் இருப்பதிலும் திருப்திக் கொள்கிறாரோ, அவர் தன் பால் அமைதியைக் கொண்டு வருகிறார்.
மேலும் தனது இரவுகளை அமைதியாக கழிக்கிறார்.
நிச்சயமாக காற்று பலமாக மற்றும் கடுமையாக வீசும் பொழுது மரத்தின் உயரமான பாகத்தையே சுண்டி எறிகிறது.”
அவர்கள் சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் காண்பிப்பதற்காக; திருக்குர்ஆன்: 4:142
மேலும் எவர் தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ… திருக்குர்ஆன்: 3:188
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பியவர்க்ளைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்… திருக்குர்ஆன்: 8:47
ஒரு கவிஞர் கூறினார்:
“ஒளிபுகு என்பது தனது செயல்களை காண்பிக்கச் செய்யும் ஒருவரின் மேல் அங்கி,
தன் மீது அதனை அவர் சுற்றி போர்த்திக் கொண்டாலும், அவர் நிர்வாணமாகவே இருக்கிறார்.”
Source : http://theheartopener.wordpress.com/
1 comment:
thank you for the valuable info.
Post a Comment