Thursday, January 19, 2012

சலாகுத்தீன் அய்யூப்


By ரம்சின் நிஸாம்



பிரபல பேரரசான ஜயூபி பேரரசை நிறுவியவரே சலாகுதீன் ஆவார். யூசுப் சலாகுத்தீன் இப்னு ஜயூப் என்ற இயற் பெயரையுடைய இவர் ஈராக்கிலுல்ல திக்ரித் நகரத்தில் 1137 ல் பிறந்தார்.


டமஸ்கசில்
மேற்படிப்பை மேற்கொண்ட சலாகுத்தீன் தனது 31வது வயதில் 1169ம் ஆண்டு பாத்திம கலிபாக்கலின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். நிர்வாகத் திறமை, போர் முறைகள் மற்றும் பயமறியா குணம் என்பவற்றின் காரணமாய் எகிப்து நாட்டின் தலைவராய் மாறினார். 1171ம் ஆண்டு எகிப்தின் பேரரசாக முடி சூடப்பட்டார். இவரது ஆட்சியின் கீழ் எகிப்தின் படைப்பலம் மற்றும் பொருளாதார வேகம் பெறுகியது. சிரியா நாட்டை ஆண்ட நூறுதீன் மன்னனின் மரணத்திற்குப் பிறகு அவரது விதவை மனைவியான இஸ்மத் உல்தீன் காத்தூன் என்பவரை மணம்புரிந்து 1174ம் ஆண்டில் சிரியா நாட்டை தனது ஜய்யூபி பேரரசுடன் இணைத்துக் கொண்டவர் அந்த காலகட்டத்திலேயே பல முறை சிலுவைப் போர்களை சந்தித்தார்.

1187- 1188ம் ஆண்டுவரை அனைத்து சிலுவைப் போர்களின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன் ஜயூப் ஒரு முழுமையான ஜயூபி பேரரசை நிறுவினார்.
ஒரு முழுமையான இஸ்லாமிய பேரரசின் கீழ் ஜெரூஸலம் நகரை கொண்டுவந்த பொழுதும் கூட அங்கு வாழ்ந்த யூத மக்களை தொடர்ந்தும் ஜெரூசலம் நகரிலேயே வாழ அனுமதித்தார்.
மிகப் பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட இவர் சாதாரண மனிதராகவும் எழிமையாகவும் வாழந்தார். பூரணமான சுன்னி இஸ்லாத்தைப் பின்பற்றிய இவர் மற்ற மதத்தினரையும் மதித்ததோடு அவர்களின் புனிதத் தளங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். ஆக்கிரமிப்பாளர்களிடையும் கன்னியமாக நடந்து கொண்ட இவர் கைதிகளை சிறையில் அடைக்கவோ, துன்புறுத்தவோ, படுகாயங்கள் ஏற்படுத்தவோ என்றைக்குமே முனைந்ததில்லை.
பிடிபட்ட கைதிகள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதி வழங்கியிருக்கிறார். இவரது சிறந்த குண நலன்கள் மூலம் அரேபியர்கள் மட்டுமல்லாது ஜரோப்பிய கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
1193ம் ஆண்டு மார்ச் 4ல் டமஸ்கசில் நோய்வாய்ப்பட்டு தனது 55 அல்லது 56வது வயதில் சலாகுதீன் ஜயூப் இறந்தார். அவர் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்வதற்குக் கூட அவரது குடும்பத்தில் போதிய பணம் இருக்கவில்லை காரணம் தனது செல்வம் முழுவதையும் ஸதகா கொடுப்பதிலேயே செலவிட்டார்.
இவரது மறைவிற்குப் பிறகு ஜயூபிப் பேரரசு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. சலாகுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டுமல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்குச் சான்றாக இவரது சின்னமான கழுகு முத்திரையே இன்றும் ஈராக், எகிப்து, யெமன் ஆகிய நாடுகளின் இராணுவச் சின்னமாகவுள்ளது.
Source :  http://ramzeenin.blogspot.com/2011/08/blog-post_20.html

No comments: