Tuesday, January 10, 2012

'கொலவெறி' புகழ் தனுஷுக்கு தமிழ் கவிஞர்கள் கண்டனம்!

சென்னையில் நடந்த ஒரு விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மகன் குமாரவேலு ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் கவிஞர்கள் அப்துல் ரகுமான், புலமைபித்தன், நா.காமராசன், பொன்னடியான், பூவை செங்குட்டுவன், அறிவுமதி, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன், ஏகாதசி, நெல்லை ஜெயந்தா, ப்ரியன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

கவிஞர்களுக்கு மேடையில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது, நடிகர் தனுஷ் பாடிய “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலைக் கண்டித்தனர். மன்னர்மன்னன் பேசும்போது, "எனது தந்தை பாரதிதாசன், தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதித்ததில்லை. இன்றைக்கு ஆங்கிலம், தமிழ் கலந்து பாட்டு எழுதுகிறார்கள். அதுபோன்ற பாடலை மக்கள் உங்களிடம் விண்ணப்பம் போட்டு கேட்டார்களா? மக்கள் இந்த பாடல்களை விரும்புகிறார்கள் என்பது அப்பட்டமான பொய்" என்றார்.

கவிஞர் அறிவுமதி பேசும்போது, "கொலை வெறிடி பாடல் தமிழையும், தமிழனையும் கொச்சைப்படுத்தும் பாடலாக உள்ளது" என்றார். கவிக்கோ அப்துல் ரகுமான் பேசும்போது, "நல்ல பாடல்கள் வந்த காலம் போய் 'ஒய் திஸ் கொலை வெறி' பாடல் காலமாகி விட்டது" என்றார்.

Source : http://www.inneram.com/

------------------------------------------------------------------------------------------------------------

ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டி ? பாடுனது வேற யார்ரும் இல்ல நம்ம தனுஷ் தானுங்கோ ...இந்த பாட்டை கேட்டவுடன் அந்த திமிர் உங்களுக்குள்ளையும் வரும் ..... வேற என்ன வரப் போகுது கொலைவெறி தானுங்கோ

1 comment:

மதுரை சரவணன் said...

unmaiyai thaane solli irukkiraarkal... pakirvukku nanari..