Monday, January 23, 2012

கீரை காய் கனிகளை ஏன் சாப்பிடணும்?



காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.
1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்?
சில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும் பிரித்து உணவை ஜீரணிக்கச் செய்வதால்
2. பூண்டு, வெங்காயம் ஏன் சாப்பிடணும்?
ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து ஜீரண சக்தியைத் தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.
3. தக்காளி, பச்சை திராட்சை ஏன் சாப்பிடணும்?
நுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படுகின்றது.
4. கேரட், மாம்பழம் ஏன் சாப்பிடணும்?
இவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.

5. சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஏன் சாப்பிடணும்?
இருதயப் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. இதய ரத்தக்குழாயில் ரத்தம் கட்டுவதைத் தடுக்கிறது.
6. ஆரஞ்சு, எலுமிச்சை ஏன் சாப்பிடணும்?
இவையும் புற்றுநோய் உட்பட நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவை. பெண்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.
7.  வல்லாரை ஏன் சாப்பிடணும்? வல்லாரை இலைபொடி காலை, மாலை நெய்யில் சாப்பிட்டு வர சுறுசுறுப்பை தரும். சளித்தேக்கம் நீங்க - வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் நீங்கும். யானைக்கால் வியாதி குணமாக...8.  முள்ளங்கி ஏன் சாப்பிடணும்? முள்ளங்கி நீர்த்தாரை வியாதிகள் குணமாக - முள்ளங்கி சாறு 30 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர நேர்தாரை வியாதிகள் குணமாகும். மலக்கட்டு நீங்க - முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி. 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும். காமம் பெருக - முள்ளங்கி விதையை பொடி செய்து சாப்பிடணும். 9.  மணத்தக்காளி கீரை ஏன் சாப்பிடணும்? தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று. அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது. 10.  பசலை கீரை ஏன் சாப்பிடணும்? பசலை கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது . சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன . பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.


www.nidur.info

No comments: