Tuesday, October 11, 2011

இயற்கையின் இனிமை கண்டு ரசி !


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்.   

  இறைவனது படைப்புகளை கண்டு ரசிக்கும் போதுதான் படைத்தவனின்  அனைத்து  மாட்சிமைகளும் நாம் அறிய முடியும். மாபெரும் சக்தி அதில் காணக் கிடப்பதனை நாம் அறிய இயற்கை விஷயங்களை பார்க்கும் பொழுது அதில் மாபெரும் சக்தி மறைந்திருப்பது நம்  நினைவுக்கு வருகிறது.இந்த வழியில், வாழ்க்கையின் அனைத்து தருணங்களும் உண்மையான நம்பிக்கை எற்பட்டு அதன் பிரதிபலிப்பின் காரணங்கள் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது.
 
 
  இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும்  அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது.
நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் 
நிச்சயமாக அல்லாஹ்வின் ஆற்றல் அதில் அடங்கி இருபதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து  வந்தது .அரிசி நெல்லிருந்து  வந்தது  ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.

  வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.   (குர்ஆன் 31:20)



 

No comments: