Saturday, October 15, 2011

யாருக்கு ஓட்டளிப்பது ? ஊரை அடித்து உலையில் போடுபவருக்கு ஓட்டளிக்காதீர்!

ஊரை அடித்து உலையில் போடுபவருக்கு ஓட்டளிக்காதீர்! -Dr.RafiudeenSource

இறைவணக்க இடமான பள்ளிவாசலிலும் தேர்தல் பிரசாரங்களால்    மக்கள் அவதி . நீடூர்  பள்ளிவாசல் சுற்றிலும் வேட்பாளர்கள்.தொழுவதும், அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டிய இடத்தில தேர்தல் விளம்பரங்கள் (நோட்டிஸ்) படிக்கும்  நிலைக்கு தள்ளப் பட்டு விட்டார்கள் 


------------------------------------------------------------------------------------

யாருக்கு ஓட்டளிப்பது ?தமிழகம் மீண்டுமொரு தேர்தல் திருவிழாவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் மீண்டுமொருமுறை மக்களை சந்திக்க வந்துக்கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளை தாராளமாக தந்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிக்கு பின் இது தொடருமா என்பது பற்றி வாக்காளர்கள் அனைவரும் நன்கு அறிவர். 

வாக்குறுதி பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையில்


வருகிற உள்ளாட்சி தேர்தலின் சிறப்பே தெருவுக்கு ஒரு பிரதிநிதி, ஊறுக்கு ஒரு பிரதிநிதி என்பதுதான். சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்த வருட தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக செய்திள் தெரிவிக்கின்றன. அதற்கு நமதூரும் விதிவிளக்கள்ள. வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என எல்லா பதவிகளுக்குமே அதிகமான நபர்கள் போட்டியிடுவதை நாம் அறிவோம். யாருக்கு ஓட்டளிப்பு என்பதில் மிகப்பெரிய குழப்பம் பெரும்பாளான ஊர் மக்களிடம் காணப்படுவதை அறிய முடிகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தத்தமது பிரச்சாரங்களை படு அமர்களமாக செய்துவருகிறார்கள். வாக்குறுதிகளை வீசி வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெற்ற பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தூஆ செய்வோம். 

யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். என்று கூறுகிறான்.
அல் குர் ஆன் 3:76ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

(அல் குர் ஆன்: 40:38)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். 

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

நூல்: புகாரி


யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு முன் நன்கு சிந்தியுங்கள். யாரை  வெகுவாக அணுக முடியுமோ, யாரிடம் சமுதாய நலனும் அக்கறையும் மிகைத்திருக்கிறதோ, யாரின் அரசியல் பின்புலம் தூய்மையாக இருக்கிறதோ, யாரின் வாக்குறுதிகள் நியாயமாக சாத்தியமிக்கதாக இருக்கிறதோ, யாரின் கடந்த கால வாழ்க்கை மட்டுமின்றி தற்போதைய வாழ்க்கையும் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறதோ, யாரிடம் அதிகமான ஈமானும் தக்வாவும் மிகைத்திருக்கிறதோ அப்படி பட்டவர்களுக்கு தங்களின் வாக்குகளை அளிப்பதில் முன்னுரிமை அளிக்கலாம். மக்களின் தேவையை நிறைவேற்றவும், தமது கடமையை நிறைவேற்றவும் மக்களை உறிஞ்சி லஞ்சம் வாங்கும் போட்டியாளர்களுக்கு ஓட்டளித்து ஓட்டுகளை  வீணடிக்காமல்  இருப்பது மிகவும் நல்லது. ஊரில் செல்வந்தன், அரசியல்  பின்புலம் மட்டுமின்றி சாதாரன மக்களுக்கும் பிரச்சனை என்றால் அதில் பங்கெடுத்து தீர்த்து வைப்பதில் முனைப்பு காட்டிய, காட்டும் வேட்பாளர்களை வெற்றிப்பெறச்செய்யலாமே.

அரசு மக்களுக்கு அளிக்கும் பணத்தையும், திட்டங்களையும் மறைத்தும் ஏமாற்றியும் தாமும் தம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டுமே நன்றாக இருந்தால்  போதும் என்று எண்ணுபவர்களை தோற்கடிப்பதில் தவறில்லை. லஞ்சம், கட்டப்பஞ்யாத்து, பெருமை, அடாவடித்தனம், கர்வம், பொய் கணக்கு போன்ற விஷயங்களில் ஈடுபடுவர்களை இனம் கண்டு தோற்கடிப்பதில் முனைப்பு காட்டலாமே. தண்ணீர் இணைப்பு, வீட்டு மனை அப்ரூவல் முதல் தெருவிளக்கு, சாலை போடுவது வரை கையூட்டு என்பது உள்ளாட்சி அமைப்புகளில் மலிந்துவிட்ட இக்காலத்தில் நேர்மையான,தூய்மையான, ஈமானான, எளிதில் அணுக்ககூடிய, பெருமை இல்லாத, இதற்கு முன்பும் பொது விஷயங்களில் ஈடுபாடு காட்டிய வேட்பாளரை வெற்றிப்பெறச்செய்தால் சிறப்பாக இருக்கும். 

லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பது பற்றி அல்லாஹ்  தன்னுடைய திருமறையில்...

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்

(அல் குர் ஆன்: 2: 188)
நமதூரின் கடந்த கால மற்றும் நிகழ்  கால நிகழ்வுகளையும் சற்றி சிந்தித்துப்பார்ப்போம். நமது வீட்டாருக்கும் அறிவுறுத்துவோம், அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கி தகுதியான நபருக்கு நமது வாக்கினை மறக்காமல் அளிப்போம். வெளிநாடு வாழ் நமது சகோதரர்கள் ஊரில் வாழும் நம் உற்றார் உறவினர்களை மறக்காமல் அலட்சியம்  செய்யாமல் வாக்களிக்க அறிவுறுத்துவோம்.
கையூட்டும் லஞ்சமும் இல்லாத, நேர்மையான தூய்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து நமதூரும், நம் சமுதாயமும் மேம்பாடு அடைய வழிவகுப்போம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails