Saturday, October 1, 2011

இல்லற வாழ்வில் பாலியலின் (செக்ஸ்) இனிய பங்கு..!

உலகம் உருள்வது பாலியல் என்று ஒன்று இருப்பதனால்தான். ஆதம் ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் கோட்பாடு.ஆதம் ஹவ்வாவின் பாலியல் தொடர்ச்சி உலகம் உள்ளவரை தொடரும் சிலர் வாழ்வதே பாலியல் விருப்பத்தினாலேயே , சிலர் அதற்காக உயிர் விடவும் அஞ்சுவதில்லை , மற்றும் ஒரு சில மக்களுக்கு பாலியல் இல்லாமல் வாழ முடியும். 
    நம் பெரும்பாலானவர்களுக்கு , பாலியல் என்பது நேசிப்பது உறவை மேன்படுத்துவது இயற்கையோடு ஒன்றியது மற்றும் அது வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. மன ரீதியான ஒரு ஆறுதலும் அடைகின்றனர்.நல்ல,முறையான நேர்மையான பாலியல்-செக்ஸ், பாதுகாப்பானது மகிழ்வை தருவதுடன் அது தனிப்பட்ட ஒரு எல்லைக்குள் அடங்கியது .அது கவலை மறக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு பக்கம் வீசும் காதல் கானல் நீர்.  இரு பக்கமும் இணைந்தால் அது தென்றல்.  அது முறையாக காலத்தோடு வயதோடு முறைப் படுத்தப்பட்டிருந்தால் அனைத்து வேடிக்கையிலும் உயர்வானதாக இருக்க முடியும். இது கவர்ச்சிகரமான மற்றும் விரும்பியதாக உணரச் செய்யும் மிக பெரிய தார்மீக உயர் சக்திகள் இதில் அடங்கும். பதற்றமான வழி முறைகளை விடுவித்து அன்பு வழிகளில் இணைய முற்படும்போது இன்பமான இனிய நேரமாக அமையும் . ஆனால் அது தவறான வழிகளில் செயல்பட முயலும் போது துயரத்தின் விளிம்பில் வர மற்றும் பல தீய விளைவுகளை உருவாக்கக் கூடும். 20 சதவிகிதம் நோயாளிகள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தற்போது மருத்துவர்களை அணுகவும் செய்கின்றனர். இதில் வெட்கப் படுவதற்கு, தவறானது ஒன்றுமில்லை. நம்மிடம் குறை இருப்பின் அதனை போக்கிக்கொள்வது மிகவும் முக்கியமானது. 
   பாலியல் குறைபாட்டினால் பலரது மண வாழ்வு கசப்பாகி திருமண வாழ்வே முறிந்து விடும் அவல நிலையும் உண்டு. இது அவசர கோலத்தினால் வந்த விளைவே அதிகம் . பாலியல் குறைபாடுகள் வர பல காரணங்கள் உண்டு . அந்த குறைபாடுகள் வரும் காரணத்தினை அறிந்து செயல்பட்டால் நல் வாழ்வு மலரும். 'முதல் கோணல் முற்றும் கோணல்' என்பர். சிலர் முதலிரவில் ஏற்படுத்திக்கொள்ளும் தவறான அணுகு முறையும் பயந்த சுபாவமும் மனதில் அழியாமல் இருக்க நேரிடலாம் . அதனால் முதலிரவினை மகிழ்வான எண்ணங்கள் மலர வையுங்கள்.மனைவியுடன் உடலுறவு முடிந்த உடனே தூங்கி விடும் பழக்கம் மன உறவினை உன்னதமாக்காது . இது இயந்திர நிலைக்கு ஒப்பாகிவிடும் கவலை, மன சோர்வு, நாள்பட்ட நோய், ஹார்மோன் குறைபாடு, புகைபிடித்தல் , குடிப் பழக்கத்தில் அடிமையாதல், உயர் இரத்த அழுத்தம் காரணமாக தொடர்ந்து மருந்து சாப்பிடுவதால் இவைகள் பாலியல் குறைபாடுக்கு காரணமாக அமையும் வாய்ப்புண்டு . கவலை, மன சோர்வு.புகைபிடித்தல்,குடிப் பழக்கத்தில் அடிமையாதல் இவைகளிருந்து விடுபடுங்கள். மனமே பாலியல் வளர சிறந்த மருந்து .தாழ்வு மனப்பான்மையினை விட்டொழித்து மகிழ்வாக வாழுங்கள் .


No comments: