Sunday, September 4, 2011

'வாருங்கள் மச்சான்' என்ற காலம் போய் விடாமல் பார்த்து கொள்ளுங்கள் !

இன்று எனது நண்பர் சிங்கப்பூரிலிருந்து தொலைபேசியில்தொடர்பு கொண்டு  பெருநாள் வாழ்த்தினை சொன்னார் மிக்க மகிழ்வடைந்தேன்.
ஆனால் அவர் பேச்சில் எந்த மகிழ்வுமில்லை .
    'ஏன்! பெருநாளைக்கு ஊர் வரவில்லையா' ! எனக் கேட்டேன் .உடன் அவர் அழுது விட்டார்.  உடனே" நான் அழாதே என்ன உதவி வேண்டுமானாலும் கேள் என்றேன்"! 
  அதற்கு அவர் "நீர் கொடுத்து வைத்தவர் . இந்தியாவிலேயே பொருளீட்டி குடும்பத்தோடு வாழ்கிறாய் . என் கதை வேறு !
இந்தியாவுக்கு இளமை வயதில் பணத்துடனும் உடல் உருதியுடனும்  மனைவியினை பார்க்க வந்து சில காலங்கள் (மாதங்கள் அல்லது நாட்கள் ) இருந்து அப்பொழுதெல்லாம் அவள் ஆனந்தமாக அன்பு மொழிகள் கூறி வரவேற்பாள் .  இப்பொழுது அவள் சொல்கிறாள் 'காலமெல்லாம் வெளிநாட்டில் இருந்து விட்டு காலம் கடந்த போய்  இங்கு வந்து வீட்டிற்கும் எனக்கும்  பாரமாக உள்ளீர்கள் . போய் கப்பலில் சிங்கப்பூரிலிருந்து கிடைக்கும் பணத்தினை அனுப்பி வையுங்கள்' .என்கிறாள் .
திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.
கடலில் படகுப்பயணம் செய்பவர்கள் படகில் ஓட்டை ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே வராதிருப்பதற்கு அதை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சிகள் தோல்வியடைந்தால் வேறு படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியரிடையே சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சிந்திக்கத் திறனில்லாமை, ஆத்மீகப் பயிற்சியில்லாமை போன்ற காரணங்களினால் விவாகரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆண்டவன் பள்ளியில் படுத்து உறங்கி பகலில் முடிந்தவரை வேலை செய்கின்றேன் . இது என்னைப்போல் பலரது வயதானவர்களின் வசதி அற்றவர்களின் நிலை .
குடும்பம் வாழ பணம் நாடி இங்கு வந்து இப்பொழுது குடும்பமே என்னை ஒதுக்கி விட்டது .காலமெல்லாம் 'கப்ப மாப்பிள்ளை'  'கப்பத்தா' என்ற பெரும் பெயர் கிடைத்த காலம் போய். உடல் வலிமையும் பணமும் பறந்ததால் அனைவர் மனதிலிருந்தும் தூக்கி எறியப்பட்டு மனமுடைந்தவனாக நடை பிணமாக சுழன்று வரும் நிலை."தென்னையை வைத்தால் இளநீர் பிள்ளையை பெற்றால் கண்ணீர்"
"கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்"
இறுதி வரை யாரோ . நிச்சயம் பணமில்லை என்றால் பிணம்தான் ,இறுதிவரை மனைவியல்ல ஆண்டவன்தான் .

நான் இறந்தால் கடன் வாங்கி என்னை அடக்கம் செய்ய வேண்டாம் .தயவு செய்து அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள். அரசுக்கு நான் நிறைய வரி கொடுத்துள்ளேன்,அந்த வேலையினை அரசே செய்யட்டும் .என கதறி அழத குரல் மனதினை பாரமாக்கிவிட்டது .
உன்னுடன் வருவது யார் ?
அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”
இப்பொழுது பாமரனும் விளங்க காலமெல்லாம்  பேசப்படும்   கவிஞர் கண்ணதாசன் பாடல்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

No comments: