Saturday, September 17, 2011

மின்னல் இடையால் ...காணாமல் போய் விட்டாள்!!



மின்னல் இடை கொடியிடை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற இடையை நினைத்துப் பார்க்கும் போது

நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.
என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வரும் .
‘மெல்லிடை’
நூலிடை’
“இடையே இல்லை”- என்னும் இடை.
பளு தாங்காமல் ஒடிந்து விடும் இடை
கொடி இடை
எடையை தூக்கினால் ஒடிந்து விடும் இடை... இவையல்லாம் மறைந்து விட்டது! 

அம்மி அரைப்பது ,கும்மி கொட்டுவது, அம்மி-உரல்-குடக்கல்,  உடலை வில்லாய் வளைத்து  குனிந்து வீடு  பெருக்குவது ஏதுமில்லை .இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் ... திருமணத்திற்கு அம்மிமிதிப்பது போய் கிரைண்டர்தான் மிதிக்க முடியும் ....  புத்தகப்  பளு கொடுத்து கூன் விழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டோம்  ஆனால் அளவுக்கு மேல் பள்ளிக்கூடம் செல்லும்  பிள்ளைகளுக்கு புத்தகப்  பளு கொடுத்து கூன் விழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டோம் 
தமிழ் நாட்டில் வடநாட்டு இனிப்பு (எங்கு பார்தாலும் சேட்டு ஸ்வீட் ஸ்டால்) உணவை விருப்ப உணவாக்கி இடை என்பது இல்லை அது வயிறாக மாறிவிட்டது .சாப்பிட்டு உடல் பருமனால் அலங்கோலமாய்க் காட்சி அளிக்கும் நிலை .

No comments: