Monday, September 26, 2011

புனிதமான மெக்கா சொகுசு விடுதிகள் நிரம்பி கஹ்பாவினை மறைக்கும் கொடுமை !

மெக்கா மாநகரம் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கிய அடையாளங்கள் மாறி செல்வந்தர்களுக்கு சொகுசு விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் வழி செய்ய மக்காவின்  புனிதத்  தன்மை இழந்து  (இஸ்லாமிய புனிதத்  தன்மை இழந்து விடும்) என்ற ஐயம் சிலரிடையே நிலவுகின்றது. புனித இடம்  ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு  உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கருத்து பிளவுபட்டு விட்டது.
 
  ஒரு காலத்தில் தூசி நிறைந்த  அரேபிய பாலைவன நகரம் இப்போது 

வானளாவிய கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல் ஒளிவிடும் கட்டிடங்கள் நிறைந்த மாநகரமாக  மாறியதால் கட்டிடங்கள் வரிசை கஹ்பாவுக்கு  சுற்றி மேலே உயர்கிறது. அதனால் கஹ்பா இருக்கும் இடம் எங்கு நின்றாலும் தெரியக் கூடியதாக இல்லை

கட்டுமான பித்து பிடித்தவர்களால் கலாசார  பெருமையை நிரூபிக்கும் நாட்டின் வரலாற்று  இடங்கள் அனைத்தும் வஹாபி கொள்கை பித்து பிடித்தவர்களால் சரித்திரம் மற்றும் வரலாறு முக்கிய இடங்கள் அழிக்கப் பட்டு விட்டன. நாயகம் வாழ்ந்த வீடு மற்றும் அவரது தோழர்கள்  இருந்த இடங்கள் பார்க்க முடியாது. அவர்கள் (வஹாபி கொள்கையுடையோர்) சொல்லும் காரணம் 'பழைய புராதான இடங்கள் இருந்தால் அதனை வணங்க முற்படுவார்கள் அதனால் அழித்து விட்டோம்' என்பார்கள். இது அவர்களது அறியாமையால் வந்த முரட்டு பிடிவாத கொள்கைதான். மற்றும்  நம்மை நாமே தாழ்வாக மதிப்பிட்டு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை அறியாதவர்களாக  மற்றவர்களை மதிப்பிட வழி வகுக்கும். உலகத்தில் பல நாடுகளில் பழமையினை பாதுகாத்து வருகின்றனர் . குறிப்பாக அதன் அருமைகளை பிரெஞ்சு நாட்டில் பாரிஸ் சென்றால் பார்க்கலாம். அவர்கள் தொல்பொருள் பாரம்பரியத்தை பார்வை நோக்கோடு வைத்துக் கொள்கின்றனர்.யாரும் அவைகளை வணங்கி வழிபடுவதில்லை. 
அல்லாஹ் கொடுத்த 
மகத்தான எண்ணெய் செல்வம் ஆடம்பர செலவுகளுக்கும் கான்கிரீட் கட்டிட ஹோட்டல்கள் கட்டி ஆடம்பர உல்லாச வாழ்வுக்கு பயன்படுத்தப் படுவது மிகவும் வேதனை தர வல்லது. 
-------------------------------------------------

  மக்கா நகரின் புனிதத் தன்மையும் அதை கண்ணியப்படுத்த வேண்டிய அவசியமும்! – Audio/Video

ஆடியோ : (Download) {MP3 format -Size : 2.7 MB}

 

மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி at சுவனத்தென்றல்
Source :http://suvanathendral.com/--------------------------------------------------- 

No comments: