Saturday, August 20, 2011

மனித உலகில் குழந்தை தொழிலாளர்

  இறைவனின் படைபில் மனிதப்படைப்பு என்பது உன்னதமானது.மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு தனியான அந்தஸ்தையும்,  சிறப்பையும், பாக்கியத்தையும் இறைவன் கொடுத்துள்ளான்.


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.இது முழுக்க முழுக்க உண்மை.
 நாம் அவர்களைப் பார்க்க முடியாது .. ஆனால் நாம்  அவர்களுக்காக ஒரு சில அனுதாபத்தைக் சொல்வதைத்  தவிர வேறு என்ன செய்ய முடியும் ....! நம்மால் முடிந்தவரை உதவுவோம் மேலும் அவர்களின் நல் வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் இந்தியாவில் 25 கோடி குழந்தை தொழிலாளர்கள்  இருப்பதாக சொல்கிறார்கள். இவர்களால் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி கறுப்பு பணம் குவிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
குழந்தை தொழிலாளர் முறையை, நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் உருவாக காரணம் பெற்றோரா, சமுதாயமா அல்லது  அரசின் அலட்சியப் போக்க! குழந்தைத்  தொழிலாளி முறை ஒழிக்க சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி திட்டம் உள்ளது. ஆனால் நாட்டில் நடப்பது என்ன?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (2554)

 தீமையைக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70


 பிள்ளைப்பேறு தான் பெரும் பேறு என்பதும், மக்கட்ச் செல்வமே மகத்தான செல்வம் என்பதும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மிகப்பெரிய உண்மை.அதனினும் பெரிது யாதெனின், பெற்ற மக்களை பேணி வளர்ப்பதாகும்.


2 comments:

VANJOOR said...

ON VIEWING THE VIDEO AND THE PHOTOS

MY HEART SHIVERED / TREMBLED WITH GRIEF NOTHING BUT GRIEF AND GRIEF.

MADE ME FEEL WITH IMMENSE GRATEFULNESS TOWARDS ALLAH S.W. T.
FOR PLACING MY CHILDHOOD
WITH MY RESPONSIBLE PARENTS
SO THAT I NEVER HAD A SHADOW OF SUFFERINGS THOSE CHILDREN ARE GOING THROUGH.

MADE ME REALISE HOW WONDERFUL /
RESPONSIBLE / LOVING MY PARENTS
BEEN TO ME.

WITH TEARS BRIMMING
I RAISE MY BOTH HANDS
TOWARDS ALMIGHTY

FOR THE RELIEF OF
THOSE SUFFERING CHILDREN
THROUGHOUT THE WORLD

WITH REQUEST FOR ALL
EACH AND EVERYONE OF YOU
TO JOIN IN.

VANJOOR

Unknown said...

when India would be free from such bondage .Its a shame to India and for our society.

May Allah Take care Evryone on this earth..Ameen