Friday, August 12, 2011

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்


 தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை.  நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான்.

தேரிழந்தூர் தாஜுதீனின் பெற்றோர் : அப்துல் சத்தார் , நூருன்னிஷா.

தேரிழந்தூர் தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார்.  அல்லாஹ்வின் அருளால்  1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.
அவருக்கு பாடல் தந்த கவிஞர்கள்.
கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். கவிஞர் ஹாபிஸ் பாருக் பஜ்லி, தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, வடகரை அலி ,   தேரிழந்தூர் ஜக்கரியா,K.R.M.ஜியா, கீழக்கரை முஹம்மது சுல்தான் இக்பால்  , 
கீழக்கரை முஹம்மது மஹ்ரூப், வடகரை B C C M  ஷேக் மற்றும் பலர்.

எனது உடன் பிறந்த அண்ணன் நீடூர்   வழக்கறிஞர் A.M.சயீத் B.A.B.L  அவர்கள் அவரை பிரபலப் படுத்தியவரில் முக்கியமானவர்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness."



 
தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி(ஒரு பகுதி ) தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும் மிக்க நன்றி. பேட்டி எடுப்பவருக்கும், பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கும்,பேட்டியில் பங்கேற்கும் எனது அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்!

யாநபியே எங்கள் இரசூல் நபியே நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்-குர்ஆன் 21: 107)
நன்றி :சங்கமம் டீ. வீ . அபுதாபி Jazakkallahu Hairan : SANGAMAM TV ABUDHABI
தேரிழந்தூர் தாஜுதீனுக்கு வாழ்த்துக் கவிதை - கிளியனூர் இஸ்மத்
S.E.A. முஹம்மது அலி ஜின்னாவுடன் தாஜுதீன்
 தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன...

2 comments:

KALAM SHAICK ABDUL KADER said...

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் எனது பாடல் ஒன்றைப் பாட முடியாமல் அழுது விட்டார்; அந்த அளவுக்குப் பெருமானார் முஹம்மத்(ஸல்)அவர்கள் மீது “இஷ்க்” என்னும் காதல் கொண்டவர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான தகவல்கள்