யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)
யார், இறைவன் செல்வத்தை தனக்கு கொடுத்துள்ளான். அவன் வழியில் செலவிட்டால் தன் செல்வத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வான் என்று தூய்மையான உள்ளத்துடன் வாரி வழங்குகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் அளவு கடந்த நற்பலன்களை தருகின்றான். இறைவன் தன் திருமறையில், தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன் (2:261)
"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்."
- நபி (ஸல்)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
"இறந்த என் தாய்-க்காக நான் செய்ய எது சிறந்த தர்மம்?" என நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்.
"தண்ணீர் வழங்குதல்" என்றார்கள்.
அறிவிப்பவர்: சாது பின் உபதா (ரலி)
நூல்: நஸயி 3604
"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"ஜகாத்" என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க "ஜகா அஜ்ஜரஉ" (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் "ஜகா" எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
"தூய்மைப் படுத்துதல்" என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.
ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில 2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5
இன்னிசை - தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்
அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும் மிக்க நன்றி.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி
No comments:
Post a Comment