ஆணுமல்ல, பெண்ணுமல்ல தனித்தவன் உருவமற்றவன்.
இப்படித்தான் இருக்க முடியும்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.- குர்ஆன்112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.- குர்ஆன்112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.-குர்ஆன்112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. குர்ஆன்-112:4 நீ ஆந்திராவா, கேரளாவா, தமிழ்நாடா, அரபு நாடா அல்லது பணக்கார அமெரிக்காவா !
அனைத்தும் உன் ஆதிக்கமாக உள்ளதால் உலகமே உன் நாடுதான்.
ஏன் இத்தனை உலகம் படைத்தாய் ! சுவனம், நரகம், பூமி மற்றும் பிரபஞ்சம் !
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
சுவர்க்கம் மட்டும் படைத்து ஆதம் அவ்வாவை உலவ விட்டு அத்துடன் இப்லீசையும் படைத்து தவறு செய்ய தூண்டி பூமிக்கு அனுப்பி வைத்து எங்களை பன்மடங்காக்கி மரணமடையச் செய்வதின் நோக்கம் என்ன!
இறந்தால் இறப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர். ஆனால் படைத்தவன் அழைத்துக்கொண்டான் என சொல்லாமல் இருக்கும் போது எங்களை படைக்க உனக்கு ஏன் இந்த அக்கறை . உன்னைத் தொழ படைத்தாய். நாங்கள் தொழுது உன் மனம் மகிழ்வடையலாம் என்பதைவிட எங்கள் மனம் மகிழ்வடையும் என்பதனை நீ அறிவாய்.
இன்னும் உன்னைப் பற்றி கேட்க அறிவினையும் உடல் நலத்தினையும் தா! இன்ஷா அல்லாஹ் உன்னை எப்பொழுதும் என் நினைவில் வைத்து தொடர விரும்பும்...
No comments:
Post a Comment