Wednesday, August 10, 2011

இங்கிலாந்து கலவரம் - ஆயிரகணக்கான கலவரக்காரர்கள் கைது!


கடந்த சில நாள்களாக இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் கலவரங்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியுள்ளார்.
"எங்களுடைய தெருக்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்று கூறிய டேவிட் கேமரூன், "எந்தவொன்றையும் நாங்கள் பரிசீலனை செய்யாமல் இல்லை" என்றும் கூறினார்.

கடந்த சில நாள்களாக இங்கிலாந்தில் வழிப்பறிக்கொள்ளை மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தின் முக்கிய நகரங்களான பிரிஸ்டால், பிரிம்மிங்ஹாம், மிட்லாண்ட் மற்றும் லிவர்பூல் நகரங்களிலுள்ள வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புக்களும் மற்றும் வாகனங்களும் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்படுகின்றன.

நாலாவது நாளான இன்று பர்மிங்ஹாம் நகரில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறார். க்ளூசெஸ்டர் நகரின் கல்லூரி ஒன்று தீவைத்து கொளுத்தப்பட்டது. நாட்டிங்ஹாம் நகர காவல் நிலையம் ஒன்று குண்டு வீசி தாக்கப்பட்டது. சுமார் 1600 அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர். லண்டன் நகரில் 768 பேர் கைது செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கு வெஸ்ட்லேண்டில் 109 பேரும், மான்செஸ்டர் மற்றும் சல்ஃபோர்டில் 108 பேரும், லிவர்பூலில் 44 பேரும் பிரிஸ்டலில் 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெஸ்ட் மிட்லாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும் ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன.
18 வயது பெண் ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டதும் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதையும் தொடர்ந்தே இக்கலவரம் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. நிறவெறியே இக்கலவரத்தின் பின்னணி என்று கருதப்படுகிறது.
Source :http://www.inneram.com/
கோரதாண்டவதின் சில கோர முகங்கள் .....




















 Picture Source: http://qaruppan.blogspot.com/

Birmingham Muslims grieve for 3 dead Muslims kille...

No comments: