Monday, August 29, 2011

மஸ்ஜிதில் செல்போன்களை செயலிழக்கச் செய்யும் கருவி

ஜாமியா மஸ்ஜிதில் செல்போன்களை செயலிழக்கச் செய்யும் கருவி

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...


சகோதரர், சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

தற்போதைய சூழலில் அனைவருடைய கைகளிலும் செல்போன்கள் காணப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு வருபவர்கள் அவசரத்திலோ, அல்லது மறதியிலோ செல்போன்களை Silent Mode-ல் போடுவதற்கு மறந்து விடுகின்றனர். இதனால் தொழுகை நேரத்தில் அவர்களுக்கு அழைப்பு வரும்போது சத்தமாக ஒலிக்கிறது.

ஒரு சிலர் சினிமா பாடல்களையும், இசைகளையும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் பாங்கு சூரா போன்றவற்றையும், இஸ்லாமிய பாடல்கள் என தவறாக நினைத்துக்கொள்ளும் பாடல்களையும் பயன்படுத்துகின்றனர். இவற்றில் எதுவாக இருந்தாலும் அது தொழுதுக் கொண்டிருப்பவர்களை இறை சிந்தனையை விட்டும் ஒரு நிமிடம் திருப்பி விடுகிறது. அனைத்து பள்ளிவாசல்களிலும் "Switch Off the Phone" என்று அறிவிப்பு இருந்தாலும், பலர் அதை செய்வதில்லை அல்லது மறந்து விடுகின்றனர்.

இந்த குறையை நீக்குவதற்காக நமதூர் "Youngsters Group" சகோதரர்கள் பலர் இணைந்து நமதூர் ஜாமியா மஸ்ஜிதில் (மதரசா பள்ளிவாசலில்) சுமார் ஏழாயிரம் மதிப்புள்ள  "Cell Phone Jammers" எனப்படும் அலைபேசி அலைவரிசைகளை (Cellphone Signals) செயலிழக்க செய்யும் கருவியை நிறுவியுள்ளார்கள். இதன் மூலம் பள்ளிவாசலின் உள்பள்ளியில் இருந்து  சுமார் அறுபது அடி சுற்றளவுக்கு எந்த செல்போன்களும் வேலை செய்யாது. பள்ளிவாசல்களுக்குள் நாம் நுழைந்தாலே நமது செல்போன்களின் சிக்னல்கள் போய்விடும்.







இந்த நல்ல முயற்சியை மேற்கொண்ட Youngsters Group சகோதரர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Source : http://nnassociation.blogspot.com/
---------------------------------------------------------------------------------------------------------

WELCOME TO THE WORLD OF WIRELESS COMMUNICATION.

2 comments:

Thameez said...

Great job. Should follow in other Masjids too by collecting money(donation).

ZAKIR HUSSAIN said...

நல்ல காரியம்.

இது எங்கு கிடைக்கும் ? விலை எவ்வளவு ? இதை எல்லா நாட்டிலும் பயன்படுத்த முடியுமா?