Showing posts with label தர்மங்கள். Show all posts
Showing posts with label தர்மங்கள். Show all posts

Thursday, August 11, 2011

தர்மங்கள்,"ஜகாத்",வளர்ச்சியடைதல், தூய்மைப் படுத்துதல்

நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின்தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (அல்லாஹ்வுக்காக) செலவு செய்யுங்கள். ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது. (57:7)


யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)


யார், இறைவன் செல்வத்தை தனக்கு கொடுத்துள்ளான். அவன் வழியில் செலவிட்டால் தன் செல்வத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வான் என்று தூய்மையான உள்ளத்துடன் வாரி வழங்குகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் அளவு கடந்த நற்பலன்களை தருகின்றான். இறைவன் தன் திருமறையில், தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன் (2:261)


"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்."
- நபி (ஸல்)


நூல்கள்: புகாரி, முஸ்லிம்.