Sunday, August 1, 2010

கோழியிலிருந்தே முட்டை வந்தது

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற குழப்பத்துக்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். கோழியே முதலில் வந்தது என்பது தமது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக யோர்க்ஷயலுள்ள ஷெபியல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கோழியின் கருப்பையில் காணப்படும் புரதம் ஒன்றின் மூலமே முட்டை உருவாக்கம் இடம் பெறுகிறது என்பதை தாம் கண்ட றிந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

“ஒவோகிளெடிடின்  17' (ஒசி  17) என்ற புரதமானது முட்டை ஓட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்தக் கூடியதாக உள்ளது.
இந் நிலையில் முட்டையின் உருவாக்கம் மேற்படி முட்டை ஓட்டு அபிவிருத்திக்கான புரதத்தால் கட்டுப்படுத்தப்படுவது தமது ஆய்வில் அவதானிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்தப் புரதம் கல்சியம் காபனேற்று மூலக்கூறுகளை கல்சிய பளிங்குகளாக மாற்றி முட்டை ஓட்டு விருத்திக்கு உறுதுணையாக செயற்படுகிறது.

"நீண்ட காலமாக முட்டையிலிருந்தே கோழி வந்ததாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தற்போது கோழியே முதலில் வந்தது என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது'' எனத் தெரிவித்த மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய கலாநிதி கொலின் பிறீமன், இந்த ஆய்வின் முடிவானது புதிய மூலப்பொருட்களை கண்டுபிடிக்க வழிவகை செய்யும் என நம்புவதாகக்  கூறினார்.

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கோழிதான் முதலில் என்பதை
ஆதாரப்பூர்வமாக ஆராய்ச்சியாளர்கள்
நிரூபித்துள்ளது பாராட்டப்பட
வேண்டிய விஷயம்!!!

கோழியிலிருந்து முட்டை வரும். ஆனால்,
முட்டையிலிருந்து கோழி வராது.
(காரணம், முட்டையிலிருந்து
கோழிக்'குஞ்சு'தான் வரும்)

Thamizhan said...

அறிவியல் ஆராய்ச்சி ஆரம்ப காலத்தின் அடித்தளத்திற்கே சென்றுள்ளது. "பெரும் மோதல்"(BIG BANG ) நடந்ததிலிருந்த துகல்களைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டு பிடித்து ஒத்துக் கொள்ள வேண்டியது "மனிதன் தான் கடவுளைப் படைத்தான் " என்பதும், மனிதரின் மகிழ்ச்சி மனிதரின் கைகளில்தான் என்பதும்.