Friday, August 6, 2010
தாஜ்மஹாலை கட்டியவன் காமப்பித்தன்
ஷாஜகான்
முகலாய சாம்ராஜியத்திற்கு
முகவரி தந்த முதல்வன்
இவனை
காமப்பித்தன் என்கிறார்கள்
காமப்பித்தனுக்கு
காதல் எங்கிருந்து வந்தது?
காமர்கள்
கல்லரைகள் கட்டுவார்களா?
காமத்தை சுவைப்பதற்கு
தனி அறைகள்தான்
கட்டுவார்கள்
ஆனால்
இவனும் கட்டினான்
தன் மனைவிக்காக
தாஜ்மஹால்,
டெல்லி செங்கோட்டை,
டெல்லி ஜூம்மா மஸ்ஜித்,
லாகூர் ஷாலீமார் தோட்டம்,
இவன் தந்தையின் கல்லரை
என்று இன்னும் பல...
கட்டிடக்கலை பித்தனை
காமப்பித்தன் என்று
சில பைத்தியங்கள்
எமுதியது இவனின்
சரித்திரங்கள்
இவன்
பித்தனாகத்தான் வாழ்ந்தான்
ஆனால்
கட்டிடக்கலையின் நுட்பத்தில்
தன்னை
பைத்தியமாக்கிக் கொண்ட
பித்தன் இவன்
இவன் பெண்ணைக் கண்டு
காதலிக்கவில்லை
அவளை
தன் மனைவியாக்கிக் கொண்டு
காதலித்தவன்
பதிநான்கு செல்வங்களை
ஈன்ற இவன்
பதிஞானத்தை பெற்றவன்
என்பதை
அவன் கட்டிய கோட்டைகளும்
மஹாலும் சொல்கிறது
இவன் கட்டிய
கல்லரைகள்
வெறும் கற்களை சுமந்து
நிற்கவில்லை
திருக் குர்ஆனின்
சொற்களை சுமந்து
நிற்கிறது
இருபத்து இரண்டு
ஆண்டுகளில் கட்டி
முடிசூடியது தாஜ்மஹால்
என்றால்
செங்கோட்டை,
பெரியப்பள்ளி
முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள்?
தனது வாழ்க்கையை
கட்டிடக்கலைக்காவே
கொடுத்த பித்தனை
காமப்பித்தன் என்று பிதற்றுவது
சரியா?
காமப்பித்தன் கட்டிய
கல்லரைதான்
இன்று
உலக அதிசயமா?
இவனை
காமப்பித்தன் என்று
சொல்வதுதானே அதிசயம்!
காமப்பித்தனால்
இத்தனையும் செய்ய முடியுமா???????
தரித்திரம் நீங்குவதற்கு
சரித்திரங்களை
எழுதக்கூடாது.
http://klr-ismath.blogspot.com/2010/08/blog-post.html
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஏன் இவ்வளவு உஸ்னம்.
Post a Comment