குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாதுஎன முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முன்னணி பிரமுகருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் 75 சதவீத மானியத்தில் நிறைவேற்றப்படும் வீட்டு வசதி திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என, பெயர் வைப்பதா' எனவும் அவர் வினா விடுத்தார். ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் உரையாற்றினார். அப்போது .
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இதுஎன்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் தான்
எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்., பெண் எம்.எல்.ஏ., வீட்டை இடித்து "சீல்' வைத்தனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை. அந்த வீடு, "எப்படியோ' சம்பாதித்து கட்டியதல்ல. அவரது பரம்பரை சொத்து. இதை நான் கேட்டால் மோசமானவன் என்கின்றனர். ஏமாந்தால் எல்லாவற்றையும் சுருட்டிவிட வேண்டும் என, நினைக் கின்றனர். "108' இலவச ஆம்புலன் சுக்கு மத்திய அரசு பணம் கொடுப் பது, சாதாரண மக்களுக்கும் தெரியும்.மாநில அரசின் திட்டமாக இருந் தால், ஆம்புலன்சில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர். முதல்வரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். அவர் நேரம் ஒதுக்கவில்லை.
குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், 70 முதல் 80 ரூபாய் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை செய்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.இளங்கோவனின் அதிரடி பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : http://www.inneram.com/201008059804/the-old-man-should-not-be-silly-evks-talk-abt-karunaa
1 comment:
இளங்கோவன் என்னதான் பேசினாலும் முடிவெடுப்பது டில்லி, 5 mp சீட்டுக்காக மொத்த அசெம்பளி சீட்டையும் கருணாவிற்கு தாரை வார்ப்பவர்கள் அல்லவா.
Post a Comment