Sunday, August 1, 2010

பில் கிளிண்டன் மகள் ஆடம்பரத் திருமணம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன், தற்போதைய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியினரின் ஒரே மகள் செல்சியா தனது பள்ளிப்பருவ நண்பனும் வங்கி முதலீட்டாளருமான   மெஸ்வின்ஸ்கியை காதலித்து வந்தார்.
பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம்  நியுயார்க் நகரில் 500  ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட் ஒன்றில் இன்று மிக மிக ஆடம்பரமாக நடந்தேறியது.  கண்ணாடிகூடாரம் அமைக்கப்பட்டு இந்திய ரூபாயில் 23 கோடி (3 முதல் 5 மில்லியன் டாலர் வரை ) செலவிடப்பட்டுள்ள இத்திருமணத்தில் நிச்சயதார்த்த மோதிரம் மட்டுமே 1 மில்லியன் டாலராம்.

சிறப்பு அழைப்பாளர்களாக 500 பேர் மட்டுமே இத் திருமண நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உணவு பதார்த்தங்கள் 125 ஆயிரம் டாலர், திருமண கேக் மட்டும் 11 ஆயிரம் டாலர், படம பிடித்தல் வகைக்கு 40 ஆயிரம் டாலர், பாதுகாப்பு வகைக்கு 200 ஆயிரம் டாலர் , இசை நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் டாலர், டாய்லட் வகைக்கு 15 ஆயிரம் டாலர், மதுபான வகைக்கு 30 ஆயிரம டாலர் செலவிட்டுள்ளனராம்.
http://www.inneram.com/201008019703/bill-clinton-daughters-grand-marriage

No comments: