சர்வதேச குழு: மக்கா மெட்ரோ, இவ்வருட ஹஜ் யாத்திரிகர்களின் வசதிகளைக் கவனிக்கவென போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நன்கு பூர்த்தி செய்துள்ளது என சவூதி ஹஜ் அமைச்சர் புவாத் அப்துல் சலாம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அடுத்த வருடம் ரயில் சேவை தனது முழு வசதிகளுடன் பணியாற்றும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உத்தேசமாக, 1.7 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ்ஜுக்கென மக்காவுக்கு வரவுள்ளனர். கடந்த எட்டு மாதங்களின் போது, 2.6 மில்லியனுக்கும் அதிகமான உம்ரா யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்து சென்றுள்ளனர் என மேலும் அவர் தெரிவித்தார்.
பல யாத்திரிகர்கள், ஹஜ் கடமைகளை முடித்த பிறகு, சட்டவிரோதமாக சவூதியில் தங்கிவிட முனைகின்றனர். எனினும், அமைச்சின் நெருக்கமான அவதானிப்பின் காரணமாக, இவ்வாறான சட்டவிரோத குடியேற்றங்கள் நன்கு குறைக்கப்பட்டள்ளன எனவம் அவர் தெரிவித்தார்.
http://iqna.ir/ta/news_detail.php?ProdID=623428
No comments:
Post a Comment