மாதத்திற்க்குள்ளே
மணம் முடித்து இப்போது
எங்கோ நீங்கள்;
குரல் மட்டுமே
தின தரிசனமாய்
கரிசனமாய்!!
கொடுத்த பதவிக்கு பொருத்தமாய்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டீர்கள்
குழந்தையை!!
எல்லோரும் சந்தோஷத்தில்
நான் மட்டும் சங்கடத்தில்;
உரைக்க வேண்டும்
உன்னிடத்தில்தான் முதன்முதலில்
எண்ணியிருந்த எனக்கு;
உன் சந்தோஷதைக் காணமுடிந்ததோ
கைப்பேசி வாயிலாக!!
ஆர்பாட்டமில்லாமல்
அழுது அழுது
பொழுதுதான் போனது;
நீ இன்னும் வரவில்லை!!
கலங்கிய
கண்களுடன்
கனத்தத் தனிமையுடன்
கேட்டுக் கொண்டே இருந்தேன்
நீ எப்போது வருவாய் என!!
முட்டிய வயிறை
தொட்டுப் பார்க்க
நீ வேண்டும் என நான் நினைக்க;
நீயோ குழந்தைக்கு பெயர் அனுப்பி
பெருமிதப்பட்டாய்!!
துடிக்கின்ற
இடுப்பு வலியில்
உன் கரத்தினைத் தேடும்
என் கண்கள்!
வெறுத்தேப் போனேன்
மசக்கையானதை எண்ணி;
விழித்துப் பார்க்கும் போதாவது
நீ இருப்பாய்
என நான் எண்ண;
குழந்தையின் புகைப்படம்
அனுப்பியாயிற்று
உன் கணவனுக்கு என
கொல்லென்று சிரிப்பு
என்னைச் சுற்றி!!
வழிந்தக் கண்ணீரை
துடைக்கக் கூட
வழியில்லாமல்
இல்லை இல்லை
பலமில்லாமல்!!
எப்படியும் பார்த்திடலாம்
எண்ணிய எனக்கு;
கம்மிய குரலில்
விம்மிய பேச்சுடன்
உன் குரல் கைப்பேசியில்!!
மாற்றம் தெரிந்தது
மறு முனையில்;
அழுகையுடன் சேர்ந்த சிரிப்பு;
அதிர்ந்தப் போன நான்;
ஆறுதல் கூறினேன்
உனக்கு!!!
இறுதியாக
துண்டித்துவிட்டாய்
தொடர்பை
நான் தைரியமாக உள்ளதாய்
என நீ எண்ணி!!!!
- யாசர் அரஃபாத்
2 comments:
nice photo..mother and child
அழகிய கவிதை. இதை படிக்கும் பொழுது, தூர தேசத்தில் இருக்கும் கணவனை தன் அருகில் காணவேண்டும் என்று ஏங்கும் சகோதரிகளின் சோகம் நம் மனதில் ஆழமாய் பதிகிறது. மிக அழகிய நடையில் எழுதியுள்ளார் சகோதரர்.
Post a Comment