Wednesday, April 28, 2010

நீ எப்போது வருவாய்,,,,,,

From : Faizur Hadi

மாதத்திற்க்குள்ளே
மணம் முடித்து இப்போது
எங்கோ  நீங்கள்;
குரல் மட்டுமே
தின தரிசனமாய்
கரிசனமாய்!!
 
கொடுத்த பதவிக்கு பொருத்தமாய்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டீர்கள்
குழந்தையை!!
 
எல்லோரும் சந்தோஷத்தில்
நான் மட்டும் சங்கடத்தில்;
உரைக்க வேண்டும்
உன்னிடத்தில்தான் முதன்முதலில்
எண்ணியிருந்த எனக்கு;
உன் சந்தோஷதைக் காணமுடிந்ததோ  
கைப்பேசி வாயிலாக!!
 
ஆர்பாட்டமில்லாமல்
அழுது அழுது
பொழுதுதான் போனது;
நீ இன்னும் வரவில்லை!!
 
கலங்கிய
கண்களுடன்
கனத்தத் தனிமையுடன்
கேட்டுக் கொண்டே இருந்தேன்
நீ எப்போது வருவாய் என!!
 
முட்டிய வயிறை
தொட்டுப் பார்க்க
நீ வேண்டும் என  நான் நினைக்க;
நீயோ குழந்தைக்கு பெயர் அனுப்பி
பெருமிதப்பட்டாய்!!
 
துடிக்கின்ற
இடுப்பு வலியில்
உன் கரத்தினைத் தேடும்
என் கண்கள்!
 
வெறுத்தேப் போனேன்
மசக்கையானதை எண்ணி;
 
விழித்துப் பார்க்கும் போதாவது
நீ இருப்பாய் 
என நான் எண்ண;
குழந்தையின் புகைப்படம் 
அனுப்பியாயிற்று
 உன் கணவனுக்கு என
கொல்லென்று சிரிப்பு
என்னைச் சுற்றி!!
 
வழிந்தக் கண்ணீரை
துடைக்கக் கூட 
வழியில்லாமல்
இல்லை இல்லை
பலமில்லாமல்!!
 
எப்படியும் பார்த்திடலாம் 
எண்ணிய எனக்கு;
கம்மிய குரலில்
விம்மிய பேச்சுடன்
உன் குரல் கைப்பேசியில்!!
 
மாற்றம் தெரிந்தது 
மறு முனையில்;
அழுகையுடன் சேர்ந்த சிரிப்பு;
அதிர்ந்தப் போன நான்;
ஆறுதல் கூறினேன்
உனக்கு!!!
 
இறுதியாக
துண்டித்துவிட்டாய்
தொடர்பை
நான் தைரியமாக உள்ளதாய்
என நீ எண்ணி!!!!
 
- யாசர் அரஃபாத்

2 comments:

Anonymous said...

nice photo..mother and child

அப்துல் பாஸித் said...

அழகிய கவிதை. இதை படிக்கும் பொழுது, தூர தேசத்தில் இருக்கும் கணவனை தன் அருகில் காணவேண்டும் என்று ஏங்கும் சகோதரிகளின் சோகம் நம் மனதில் ஆழமாய் பதிகிறது. மிக அழகிய நடையில் எழுதியுள்ளார் சகோதரர்.