தமிழ்நாட்டை சேர்ந்த மனிகண்டன் சவூதி அரேபியாவின் தலைநகர் 'ரியாத்'தில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்
அவர் தன் வேலையை முடித்து கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பார்சல் கண்டெடுத்து அதை பிரித்து பார்த்த போது திகைத்து விட்டார். உள்ளே இருந்தது அததனையும் சவுதி 'தினார்' நோட்டுக்கட்டுகள் ஆகும். அதன் மதிப்பு 50000 அதாவது இந்திய மதிப்பு சுமார் ஆறரை லட்சம் ரூபாய். இரவு பதினோரு மணி என்பதால் அருகில் இருந்த 'டீ'க்கடைக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த ஹம்சா என்பரிடம் இங்கு தவறவிட்ட பணத்தை யாரேனும் தேடிவந்தால் அவரிடம் ஒப்படைக்கும் படி கூறினார்.
அடுத்த 15 நிமிடத்திலேயே அங்கு சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த படபடப்புடன் வந்து தான் பணத்தை தவற விட்டதாக கூறி கவலையுடன் தேடினார். உடனே அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணிகண்டன் பணத்தை எடுத்ததை யாருமே பார்க்காத நிலையிலும், மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்ட அவரை அங்கு இருந்த அனைவரும் வெகுவாக பாராட்டினர். மேலும் அங்கு நடந்த பரபரப்பால் உடனே வந்து சேர்ந்த சவுதி காவல்துறையினரும் மணிகண்டனை பாராட்டினர். மேலும் மணிகண்டன் கூறும் போது 'தன் மனசாட்சியில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் படி கூறியதாகவும், அதன் படி தான் நடந்து கொண்டதாகவும் கூறினார். இந்த செய்தியை 'மத்யமம்' என்ற மலையாள நாளிதழ் வெளியிட்டதன் மூலம் முழு வளைகுடா நாட்டிலும் செய்தி பரவி மணிகண்டனுக்கு பாராட்டுகலும், வாழ்த்துக்களும் குவிகின்றன.
தமிழ்நாட்டை சேர்ந்த மனிகண்டன் சவூதி அரேபியாவின் தலைநகர் 'ரியாத்'தில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
அவர் தன் வேலையை முடித்து கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பார்சல் கண்டெடுத்து அதை பிரித்து பார்த்த போது திகைத்து விட்டார். உள்ளே இருந்தது அததனையும் சவுதி 'ரியால்' கட்டுகள் ஆகும். அதன் மதிப்பு 50,000 அதாவது இந்திய மதிப்பு சுமார் ஆறரை லட்சம் ரூபாய். இரவு பதினோரு மணி என்பதால் அருகில் இருந்த 'டீ'க்கடைக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த ஹம்சா என்பரிடம் இங்கு தவறவிட்ட பணத்தை யாரேனும் தேடிவந்தால் அவரிடம் ஒப்படைக்கும் படி கூறினார்.
அடுத்த 15 நிமிடத்திலேயே அங்கு சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த படபடப்புடன் வந்து தான் பணத்தை தவற விட்டதாக கூறி கவலையுடன் தேடினார். உடனே அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணிகண்டன் பணத்தை எடுத்ததை யாருமே பார்க்காத நிலையிலும், மிகுந்த நேர்மையுடன் நடந்து கொண்ட அவரை அங்கு இருந்த அனைவரும் வெகுவாக பாராட்டினர். மேலும் அங்கு நடந்த பரபரப்பால் உடனே வந்து சேர்ந்த சவுதி காவல்துறையினரும் மணிகண்டனை பாராட்டினர். மேலும் மணிகண்டன் கூறும் போது தன் மனசாட்சியில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் படி கூறியதாகவும், அதன் படி தான் நடந்து கொண்டதாகவும் கூறினார். இந்தச் செய்தியை 'மத்யமம்' என்ற மலையாள நாளிதழ் வெளியிட்டதன் மூலம் முழு வளைகுடா நாட்டிலும் செய்தி பரவி மணிகண்டனுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிகின்றன.
Source : http://www.inneram.com/201004107756/tamil-recovered-50000-riyal-in-saudi-arabia
1 comment:
nice information, thanks for this post
Post a Comment