"தமிழக அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தால் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பி.எட். பட்டதாரிகள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கல்வி அமைச்சர் க. பொன்முடி ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.
விழாவில் கல்வி அமைச்சர் க. பொன்மொடி கலந்து கொண்டுப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அப்போது, "4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எட்., போன்ற படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கின்றன. அதனால், பட்டப் படிப்பு முடித்து பி.எட்., படிப்பவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் அவர்களின் வேலைவாய்ப்பு மறுக்கப்படாது.
இப்போதைய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தால் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு பி.எட். பட்டதாரிகள் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதைவிட தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதுதான் உண்மையான வேலை. எழுத்தறிவித்தன் இறைவன் ஆவான் என்று வார்த்தைக்காக சொல்லப்படுவதில்லை. 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே உணர்ந்து சொல்லப்பட்டது.
ஆசிரியர்கள் தமிழில் பாடம் சொல்லித் தருவதை கௌரவக் குறைவாக நினைக்கின்றனர். இது கூடாது. மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். பயிற்று மொழியாக தமிழைப் பயன்படுத்துங்கள். கல்வித் துறையில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வருவது கட்டாயம். அதைச் செயல்படுத்தும் பொறுப்பும் ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது" என்று பேசினார்.
பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு! Source : http://www.inneram.com
1 comment:
Very shorts, simple and easy to understand, bet some more comments from your side would be great
Post a Comment