Wednesday, April 21, 2010

வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து

  நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ நன்றாக உடுத்துவது மனதிற்கு சந்தோஷம் தருகிறது என்பார். பிறர்படும் துன்பத்தைப் பார்த்து கூட சந்தோஷப்படும் ஒரு சிலர் இருக்கும் இவ்வுலகில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை ஐந்தைந்தாக பட்டியலிட்டுள்ளேன்.
வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:
1. மற்றவர் செய்யும் தவறுகளை மன்னித்தல்
2. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் எளிய வாழ்க்கை வாழ்தல்
3. நடப்பவை அனைத்தையும் நல்லதற்கே என்ற எண்ணத்துடன் கவலை கொள்ளாமல் இருத்தல்
4. தினமும் குறைந்தது ஒருவருக்காவது உதவி செய்தல்
5. அளவுகடந்த அதிக ஆசை கொள்ளாமல் இருத்தல்

வாழ்வில் ஆரோக்கியத்துடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:
1. தினமும் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் உறக்கத்திலிருந்து மீண்டுவிடுதல்
2. தினமும் குறைந்தபட்சம் இரு வேளை (காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்) பல் துலக்குதல்
3. தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடத்தல்
4. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து காய்கறி, பழவகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு முடிந்தவரை சீக்கிரமாகப் படுக்கைக்கு செல்லுதல்
வாழ்வில் பேணப்பட வேண்டியவைகளில் சில:
1. மனதை ஒருமுகப்படுத்தி இறைதியானம் புரிதல்
2. சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இன்முகத்துடன் முகமன் கூறல்
3. யாரையும் துச்சமென கருதாமல் பிறர் கூறும் கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்டல்
4. எந்த செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அதனால் விளையும் பயன் மற்றும் கெடுதலைக் குறித்து சிந்தித்தல்
5. முடிந்தவரை தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்து மவுனம் கடைபிடித்தல்
வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவைகளில் சில:
1. ஒருவர் இல்லாதபோது அவரின் தவறுகளை மற்றவரிடம் கூறுதல்
2. அனுமதியின்றி மற்றவரின் வீடுகளினுள் நுழைதல்
3. எதிர்பாலருடன் அவசியமின்றி உரையாடுதல்
4. மற்றவர்களின் பொருட்களை அனுமதியின்றி உபயோகித்தல்
5. தவறு செய்பவர்கள் எனத் தெரிந்தபின்பும் அதை அவர்களுக்கு உணர்த்தாமல் அவர்களோடு நட்பு கொண்டாடுதல்

இத்துடன் நின்று விடாமல் உங்களுக்குத் தெரிந்த சிலவற்றையும் ஐந்தைந்தாக இங்கே பின்னூட்டத்தில் பட்டியலிடலாமே?

- இப்னுஜமால்
நன்றி: http://www.satyamargam.com
வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து

No comments: