Saturday, April 3, 2010

சென்னை - சில கோவையற்ற எண்ணங்கள்



பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்திய கருத்தரங்கம், நண்பர் இஷாக்கின் ’துணையிழந்தவளின் துயரம்’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா என இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இஸ்லாமிய இலக்கியக் கழக விழாவில் அறிமுகமான முனைவர் நத்தர்சாவுடன் (தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி, சென்னை) இரண்டு தொடர்ந்த சந்திப்புகள் உண்டாயின. நத்தர்சாவின் இல்லத்தில், நாகூர் ரூமி, களந்தை பீர் முகம்மது, ரோஜா குமார் என எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ரூமியால் எப்படி இப்படி கலகலப்பாகத் தொடர்ந்து பேச முடிகின்றது என்று வியக்கிறேன். தொடர்ந்து புதுக்கல்லூரியின் தமிழ்த்துறைக்கும் சென்று வந்தேன். எம்.ஏ. தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களிடையே கணினியில் தமிழ்த் தட்டச்சு குறித்து உரையாற்றினேன். அமீரகத் தமிழ் மன்றத்தில் கணினிப் பயிலரங்கம் நடத்தியபோது உருவாக்கிய பவர் பாயிண்டுகளை ஆசிப் அனுப்பி வைத்தது என்னுடைய உரைக்கு மிகவும் உதவியாக இருந்தது.



உரையை புதுக்கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். படத்தில் இருப்பது கல்லூரி முதல்வர்.

*
நன்றி :சென்னை - சில கோவையற்ற எண்ணங்கள்
புதுக்கல்லூரி, சென்னை

No comments: