Thursday, April 8, 2010

கவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் !

 
தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.
மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.

மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.

முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.

நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.

பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?
 

No comments: