Sunday, November 6, 2022

Why we should focus on mathematical skills...?சமூகத்தில் திறம்பட செயல்பட தேவையான திறன்களாக

 


  ·

Why we should focus on mathematical skills...?

Ashika Imthiyaz

     இன்றைய உலகளாவிய சமூகத்தில் திறம்பட செயல்பட தேவையான திறன்களாக communication, collaboration, critical thinking மற்றும் creativity ஆகியவற்றை சொல்லலாம். இவற்றில் எதையும் அலசி ஆராய தேவையான விமர்சன சிந்தனையை (critical thinking) வளர்க்க Mathematical skills பயன்படுகிறது.

     Critical thinking சிறந்த பொறியாளர்களுக்கு மட்டும் தேவைப்படும் திறன் அல்ல. மருத்துவர்கள், கட்டிட கலைஞர்கள், கணக்காளர்கள், நிதியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்.. மட்டுமின்றி இலக்கியவாதிகளுக்கும் கூட அவசியம். ஒரு சமூகத்தின் வளமான வாழ்வென்பது அந்த சமூகத்தின் critical thinking capacity பொறுத்தது.

       Reasons and logics மூலம் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை பற்றி புரிந்து கொள்ளவும், நம்முடைய முடிவெடுக்கும் திறனிலும் (decision making) முக்கிய பங்கு வகிப்பது critical thinking skills. இதனை வளர்த்துக் கொள்ள, mathematical way of thinking உதவுகிறது. அதாவது, பல்வேறு கேள்விகளின் மூலம் சரியான கேள்விகளை அடைவது எனலாம். ஏனெனில், சரியான கேள்விகள் தான் சரியான தீர்வுகளை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

     பெரும்பாலான நேரங்களில் நாம் கணிதத்தை எண்கள் மற்றும் கணக்கீடுகள் (numbers and calculations) என்றே புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில், கணிதம் நமது சிந்தனை முறையை புரிந்து கொள்ளவே உதவுகிறது. கணிதம் என்பது பல்வேறு கருவிகளைக் கொண்ட ஆயுதம். அதனை சரியாக கையாள கற்றுக் கொள்வதன் மூலம் உலகத்தை ஆழமாகவும் இன்னும் அர்த்தமுள்ள விதத்திலும் புரிந்து கொள்ள முடியும்.


     என் முந்தைய பதிவுகளில் நண்பர்கள் குறிப்பிட்டதை போல, பள்ளி கல்லூரிகளில் பெரும் மதிப்பெண்களில் அடிப்படையில் கணித திறனை மதிப்பீடு செய்கிறோம். எனவே தான், கணிதம் பலருக்கு கடினமான பாடமாக தெரிகிறது. சிரமம் காரணமாகவே பலர் கணிதத்தை கவனம் செலுத்தி படிப்பதில்லை. எப்படி நம்முடைய மொழித்திறனை நாம் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய முடியாதோ அவ்வாறு கணித திறனையும் மதிப்பீடு செய்ய முடியாது... கூடாது... கணிதம் மனித மொழி (human language)ஆகும். அதை புரிந்து கொள்ளும் திறன் இயற்கையாகவே நம் அனைவருக்கும் உள்ளது என்பது கணிதவியலாளர்கள் கருத்து. 

    மனிதர்கள் உட்பட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு கணித கட்டமைப்பின் (mathematical structure) ஒரு பகுதி. அவற்றை கணித ரீதியாக புரிந்து கொள்வது தான் எளிது என்றும் Max Tegmark என்ற cosmologist குறிப்பிடுகிறார்.

    அதுமட்டுமின்றி, தற்போது நவீன தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலில், கணிதம் அதன் கணிசமான பங்கை செலுத்துகிறது. ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் பின்னணியிலும் கணிதம் ஒரு கருவியாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த உலகை புதுப்பித்துக் கொள்ள மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், மாணவர்கள் கணிதத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

    எந்தவொரு டெக்னாலஜியையும் நாம் பயன்படுத்த தேவைப்படும் அப்ளிகேஷன்களின் பின்னணியில் ஒரு அல்காரிதம் இருக்கும். அல்காரிதம் என்பது கணக்கீடுகளை கொண்ட படிப்படியான செயல்முறை. கணிதம் இன்றி, தொழில்நுட்பத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது.  அதுபோல, கணித செயல்பாடு களுக்கும் தொழில் நுட்பத்தின் உதவி தேவை. இரண்டிற்குமான உறவு என்பது பரஸ்பரமானது.

     கணிதத்தை ஒரு பாடமாக கருதி பிற துறைகளைப் போலவே இதுவும் ஒரு துறை என சுருக்கி பார்ப்பது என்பது, நாம் கணிதத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே பொருள்.

    முக்கியமாக, எதையும் சரியாக புரிந்து கொள்கிறோமோ இல்லையோ... கணித அறிவு கண்டிப்பாக நாம் தவறாக புரிந்து கொள்வதை தடுக்கிறது. பொறியாளர் என்ற முறையில், நான் சொல்ல வருவது இதுவே... Maths Matters...!

No comments: