Tuesday, November 8, 2022

குமாரி கமலா

 

குமாரி கமலா

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி ஐயர், ராஜம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் குமாரி கமலா. இருவரும் கலையார்வலர்கள். இவருக்கு 3 வயதானபோது குடும்பம் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தது. அந்த வயதில் கமலா கதக் நாட்டியம் பயின்றார். அங்கு மூன்றரை வயதில் பம்பாய் ஆஸ்திக சமாஜத்தில் நடன மேதை ருக்மிணி முன்னிலையில் ஆடி அவர் கையால் மாலையிடப்பட்டு வாழ்த்து பெற்றார். ஐதராபாத்தில் கவியரசி சரோஜினி நாயுடு முன்னிலையில் நடனமாடி வாழ்த்து பெற்றார். தந்தை ஈரானிலும் பின்னர் பம்பாயிலும் பணி புரிந்தவர். கமலாவிற்கு ராதா, வசந்தி என இரு உடன்பிறந்தவர்கள் உண்டு. இரண்டாம் உலகப்போரால் கமலாவின் குடும்பம் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு இடம்பெயர்ந்தது. இது அவர் வாழ்வின் முக்கிய திருப்பம்.

குடும்பம்

பிரபல ஓவியர் ஆர். கே. லட்சுமணனை திருமணம் புரிந்தார் கமலா. அவருடன் 1960 இல் மணமுறிப்பு செய்த பின்னர்[1] 1964-ல் இராணுவ வீரர் மேஜர் லெட்சுமிநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலானார். 1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே "ஸ்ரீபரதகலாலயா' என்கிற நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

https://ta.wikipedia.org/wiki


No comments: