பாவ மன்னிப்பு தேடுதல்
*******************************************
மறதியும், பொடுபோக்கு
தன்மையும் மனிதனின் இயற்கையான
குணம். எனவே அவன் பெரும்பாலும்
பாவங்கள் செய்யும் சூழ்நிலை
ஏற்படுகிறது. அதனால்தான்
மனிதனிக்கு அல்லாஹ் தன பெரிய
அருளாக தன் மன்னிப்பை அவனுக்கு
வழங்கி இருக்கிறான். பாவம் செய்யும்
இயல்புள்ள அடியான்
அல்லாஹ்விடத்தில் அந்த
பாவத்திற்காக பிழைபொறுக்க
தேடும்போது அல்லாஹ் தன் கருணை
உள்ளம் கொண்டு பார்கிறான். இந்த
அடியான் செய்த பாவத்தை
மனிப்பதொடு மறைக்கவும்
செய்கிறான்.
குர்ஆனில் அல்லாஹ்
சொல்லிகாட்டுவான்.
ﻗُﻞْ ﻳَﺎ ﻋِﺒَﺎﺩِﻱَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﺳْﺮَﻓُﻮﺍ ﻋَﻠَﻰ
ﺃَﻧْﻔُﺴِﻬِﻢْ ﻟَﺎ ﺗَﻘْﻨَﻄُﻮﺍ ﻣِﻦْ ﺭَﺣْﻤَﺔِ
ﺍﻟﻠَّﻪِ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺟَﻤِﻴﻌًﺎ
ﺇِﻧَّﻪُ ﻫُﻮَ ﺍﻟْﻐَﻔُﻮﺭُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ
39:53.
“என் அடியார்களே! (உங்களில்)
எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே
தீங்கிழைத்துக் கொண்ட போதிலும்,
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர்
நம்பிக்கையிழக்க வேண்டாம் -
நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள்
யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக
அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக்
கருணையுடையவன்” (என்று நான்
கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
அதாவது ஒருவன் பாவம் செய்து
அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு
கேட்டுவிட்டால் அல்லாஹ் அவனை
மன்னிக்கிறான், அவனை மறுமையில்
தண்டிக்காமல் அவன் குற்றங்களை
மறைத்து கண்ணியப்படுத்துகிறான்.
அல்லாஹ்வின் இந்த மன்னிப்பு
அல்லாஹ்வின் காரியத்தில் குறை
வைத்திருந்தால் அல்லது தவறு
செய்திருந்தால் மட்டும் தான். ஆனால்
ஒருவன் மற்றவருக்கு ஏதேனும் தீங்கு
இழைத்திருந்தால் அதன் மூலம் வரும்
பாவத்திற்கு அவன் அல்லாஹ்விடமும்
மன்னிப்பு கேட்க வேண்டும் குறிப்பாக
அந்த அடியானிடமும் மன்னிப்பு
கேட்க வேண்டும்.
எனவே கருனையுள்ள
அல்லாஹ்விடத்தில் நம் பாவங்களை
சொல்லி மனிப்பு கேட்க முற்பட
வேண்டும். அல்லாஹ்விடத்தில் பாவம்
கேட்கும் அடியான் அதே பாவத்தில்
மீண்டும் செய்யமாட்டேன் என்ற
உறுதியுடன் கேட்க வேண்டும். அதே
தவறை திரும்பவும் செய்ய மாட்டேன்
என்ற உறுதி உள்ளத்தில் வர வேண்டும்.
மறுமை என்ற ஒரு நாள் உண்டு
அல்லாஹ் அந்த நாளில் நாம்
அல்லாஹ்விற்கு முன் நிற்கவைக்கப்பட்டு
நம் செய்த நன்மை தீமை பட்டியல்கள்
விரித்து நமக்கு காட்டப்படும் என்ற
அச்சம் நமக்கு எப்போதும் இருக்க
வேண்டும். மறுமை நாளில் நம்
அமல்களின் பட்டியல் பாவத்தால்
நிரப்பப்பட்டு நம்மை நாம்
கேவலப்படுத்திவிட கூடாது. எனவே
நாம் செய்த குற்றங்களுக்கும்
அல்லாஹ்விடத்தில் நாம் மானிப்பை
கேட்க வேண்டும்.
ஒரு அடியான் எவ்வளவு
பெரிய குற்றத்தை செய்தாலும் அல்லாஹ்
மாணிக்க தயாராக இருக்கிறான்.ஷிர்கை
தவிர உள்ள மற்ற குற்றங்கள்.
அல்லாஹ் குர்ஆனில் அழகாக
சொல்லுவான்.
ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻭَﺍﺳِﻊُ ﺍﻟْﻤَﻐْﻔِﺮَﺓ
53:32.
நிச்சயமாக உம்முடைய இறைவன்
மன்னிப்பதில் தாராளமானவன்;
தன் மன்னிப்பு விசாலமானது
என்று என்ன முடியாத அளவை
சொன்ன அல்லாஹ் தன அடியார்களை
அழைத்து மற்றொரு இடத்தில்
என்னிடம் பாவம் மானிப்பாய்
தேடுங்கள் உங்கள் குற்றங்களை
சொல்லி என்னிடம் மன்றாடுங்கள்
என்று சொல்கிறான்.
ﻭَﺃَﻥِ ﺍﺳْﺘَﻐْﻔِﺮُﻭﺍ ﺭَﺑَّﻜُﻢْ ﺛُﻢَّ ﺗُﻮﺑُﻮﺍ
ﺇِﻟَﻴْﻪِ
நபி ஸல்லால்லாஹு அலைஹி வ
ஸல்லம் அவர்கள் ஹதீஸ் குத்ஸியில்
அல்லாஹ் சொல்வதாக
சொல்லிகாடுக்கிறார்கள்.
ﻳَﺎ ﻋِﺒَﺎﺩِﻱ ﺇِﻧَّﻜُﻢْ ﺗُﺨْﻄِﺌُﻮﻥَ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ
ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭِ ، ﻭَﺃَﻧَﺎ ﺃَﻏْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ
ﺟَﻤِﻴﻌًﺎ ، ﻓَﺎﺳْﺘَﻐْﻔِﺮُﻭﻧِﻲ ﺃَﻏْﻔِﺮْ ﻟَﻜُﻢْ
“ என் அடியார்களே நீங்கள் இரவிலும்
பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான்
அனைத்து பாவங்களையும்
மன்னிக்கிறேன். எனவே என்னிடத்தில்
"பாவ மன்னிப்பு தேடுங்கள் நான்
மன்னிக்கிறேன்.”
இது அல்லாஹ்வின் அழைப்பு.
கொஞ்சம் நினைத்து பாருங்கள்!
அகிலம் அனைத்தையும் படைத்த
அல்லாஹ் அவன் அடிமைகளாக
இருக்கும் நாம் செய்த குற்றங்களுக்கு
தண்டனை வழங்குவதற்கு பதிலாக
அவன் நமக்கு மன்னிப்பு வழங்குவதாக
வாக்குருதியும் தருகிறான் அந்த அறிய
வாய்பை பயன்படுத்த சொல்லி நம்மை
அழைக்கவும் செய்கிறான்.
முஸ்லிம்களே! இந்த வாய்ப்பை நாம்
எவ்வாறு பயன்படுத்துகிறோம்.
அல்லாஹ்வின் இந்த சலுகையை நாம்
பயன்படுத்தவில்லை என்றால் நாம்
மறுமையில் நஷ்டவாளிகளே.
அல்லாஹ்விடத்தில் பாவ
மன்னிப்பு தேடுவது மார்கத்தில் ஒரு
முக்கியமான வணக்கம் ஆகும். உயர்ந்த
வழிபாடுகளில் இதுவும் ஒன்று என்று
சொல்லலாம். இது இறை அச்சத்தின்
அடையாளம்.
சுருக்கமாக சொன்னால்
பாவமன்னிப்பு என்பது இந்த உலகத்தில்
நான் செய்த குற்றங்களை குறைகளை
மறைத்து மன்னித்து அதற்குரிய
தண்டனைகளை மறுமையில் பெறாமல்
தவிர்ந்து கொள்ள அல்லாஹ் வழங்கிய
வாய்ப்பாகும். ஆனால் தெளிவாக
சொன்னால் இத்தகைய செயல் யார்
தன் தவறை உண்மையில் உணர்ந்து
அதை மீண்டும் செய்ய மாட்டேன் என
மனதில் உறுதி கொள்கிறானோ
அவனிடத்தில் மட்டும் தான் ஏற்படும்.
அல்லாஹ் குர்ஆனில்
சொல்லிக்காட்டுகிறான்.
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺇِﺫَﺍ ﻓَﻌَﻠُﻮﺍ ﻓَﺎﺣِﺸَﺔً ﺃَﻭْ
ﻇَﻠَﻤُﻮﺍ ﺃَﻧْﻔُﺴَﻬُﻢْ ﺫَﻛَﺮُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ
ﻓَﺎﺳْﺘَﻐْﻔَﺮُﻭﺍ ﻟِﺬُﻧُﻮﺑِﻬِﻢْ ﻭَﻣَﻦْ ﻳَﻐْﻔِﺮُ
ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ ﻭَﻟَﻢْ ﻳُﺼِﺮُّﻭﺍ ﻋَﻠَﻰ
ﻣَﺎ ﻓَﻌَﻠُﻮﺍ ﻭَﻫُﻢْ ﻳَﻌْﻠَﻤُﻮﻥَ
3:135. தவிர, மானக் கேடான ஏதேனும்
ஒரு செயலை அவர்கள்
செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும்
பாவத்தினால்) தமக்குத் தாமே
தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே
அவர்கள் (மனப்பூர்வமாக)
அல்லாஹ்வை நினைத்து தங்கள்
பாவங்களுக்காக மன்னிப்புத்
தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர
வேறு யார் பாவங்களை மன்னிக்க
முடியும்? மேலும், அவர்கள் அறிந்து
கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில்
தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
பாவமன்னிப்பு தேடுவதால்
அல்லாஹ் தன அடியார்களுக்கு பல
நன்மைகளை வைத்திருக்கிறான்.
முதன்மையாக அவர்களின் பாவங்களும்
குற்றங்களும் மன்னிக்கப்பட்டு
அழிக்கப்படுகிறது.
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
ﻭَﻣَﻦ ﻳَﻌْﻤَﻞْ ﺳُﻮﺀﺍً ﺃَﻭْ ﻳَﻈْﻠِﻢْ ﻧَﻔْﺴَﻪُ
ﺛُﻢَّ ﻳَﺴْﺘَﻐْﻔِﺮِ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠِﺪِ ﺍﻟﻠَّﻪَ ﻏَﻔُﻮﺭﺍً
ﺭَّﺣِﻴﻤﺎً
4:110. எவரேனும் ஒரு தீமையைச்
செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே
அநியாயம் செய்து பின்னர் அவர்
(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கேட்பாரானால் - அவர்
அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்
மிக்க கருணை உடையவனாகவும்
காண்பார்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
அறிவிக்கிறார்கள். நபி சல்லால்லாஹு
அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்ல
நான் கேட்டேன். “ அல்லாஹ்
சொல்கிறான் “ ஆதமின் மகனே!
(மன்னிப்பை வேண்டி) என்னை நீங்கள்
அதரவு வைத்து அழைத்தால் நான்
உங்களிடம் இருக்கும் குற்றங்களை
மன்னிப்பேன். ஆதமின் மகனே!
வானத்தின் மேகங்கள் அளவிற்கு நீ
பாவம் செய்து என்னிடத்தில் நீ பாவ
மன்னிப்பு தேடினாலும் நான் உன்னை
மன்னிக்கிறேன். ஆதமின் மகனே!
நீங்கள் பூமியின் அளவு பாவம் செய்து
எனக்கு இணை வைக்காமல் என்னை நீ
சந்தித்த்தால் (பாவ மன்னிப்பு
தேடினால்) நான் பூமி அளவிற்கு
மன்னிப்பை உனக்கு தருவேன். ””
ஒரு அடியான் பாவமன்னிப்பு
தேடினால் அவன் உள்ளம் பரிசுத்தம்
அடைகிறது. கசடுகள் அவன்
உள்ளத்தை விட்டும் நீங்கி சுத்தமாகிறது.
ﺇِﻥَّ ﺍﻟﻌَﺒْﺪَ ﺇِﺫَﺍ ﺃَﺧْﻄَﺄَ ﺧَﻄِﻴﺌَﺔً ﻧُﻜِﺘَﺖْ
ﻓِﻲ ﻗَﻠْﺒِﻪِ ﻧُﻜْﺘَﺔٌ ﺳَﻮْﺩَﺍﺀُ، ﻓَﺈِﺫَﺍ ﻫُﻮَ
ﻧَﺰَﻉَ ﻭَﺍﺳْﺘَﻐْﻔَﺮَ ﻭَﺗَﺎﺏَ ﺳُﻘِﻞَ ﻗَﻠْﺒُﻪُ
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் சொல்கிறார்கள்” ஒரு
அடியான் ஒரு பாவம் செய்தால் அவன்
உள்ளத்தில் ஒரு கருப்பு வடு விழுகிறது.
அவன் அந்த பாவத்தை விட்டு நீங்கி
தவ்பா செய்தால் அவன் உள்ளம்
பரிசுத்தம் அடைகிறது. ”
பாவமன்னிப்பு தேடுவதால் அல்லாஹ்
இவ்வுலக வாழ்கையை
மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுகிறான்.
ரிஜ்கை அடிகக்கப்படுதுகிறான். உலக
தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி
தருகிறான். எனவே நம் உலக தேவைகள்
நிறைவேறுவதற்கு பாவமன்னிப்பு
தேடுதல் ஒரு காரணமாக உள்ளது.
அல்லாஹ் குரானில் சொல்லுகிறான்.
ﻓَﻘُﻠْﺖُ ﺍﺳْﺘَﻐْﻔِﺮُﻭﺍ ﺭَﺑَّﻜُﻢْ ﺇِﻧَّﻪُ ﻛَﺎﻥَ
ﻏَﻔَّﺎﺭًﺍ * ﻳُﺮْﺳِﻞِ ﺍﻟﺴَّﻤَﺎﺀَ ﻋَﻠَﻴْﻜُﻢْ
ﻣِﺪْﺭَﺍﺭًﺍ * ﻭَﻳُﻤْﺪِﺩْﻛُﻢْ ﺑِﺄَﻣْﻮَﺍﻝٍ ﻭَﺑَﻨِﻴﻦَ
ﻭَﻳَﺠْﻌَﻞْ ﻟَﻜُﻢْ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻳَﺠْﻌَﻞْ ﻟَﻜُﻢْ
ﺃَﻧْﻬَﺎﺭًﺍ
71:10. "உங்கள் இறைவனிடம்
மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக
அவன் மிக்க மன்னிப்புடையவன்"
என்றும் கூறினேன். 71:11. (அவ்வாறு
செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்)
மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக
அனுப்புவான். 71:12. பொருள்களையும்,
மக்களையும் கொடுத்து, உங்களுக்கு
உதவி புரிவான்; உங்களுக்குத்
தோட்டங்களையும் உற்பத்தி செய்து,
அவற்றில் ஆறுகளையும் ஓட்டி
வைப்பான்.
எனவே யார் தொடர்ந்து
இஸ்திக்பார் என்னும் பாவமன்னிப்பை
அல்லாஹ்விடம் கேட்கிறார்களோ
அவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகத்தில்
பல நலவுகளை வழங்குகிறான் அவர்
கவலைகள் கச்தங்கங்களை நீகுகிறான்.
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் சொன்னார்கள்
ﻣَﻦْ ﺃَﻛْﺜَﺮَ ﻣِﻦَ ﺍﻻِﺳْﺘِﻐْﻔَﺎﺭِ؛ ﺟَﻌَﻞَ
ﺍﻟﻠَّﻪُ ﻟَﻪُ ﻣِﻦْ ﻛُﻞِّ ﻫَﻢٍّ ﻓَﺮَﺟﺎً ، ﻭَﻣِﻦْ
ﻛُﻞِّ ﺿِﻴﻖٍ ﻣَﺨْﺮَﺟﺎً، ﻭَﺭَﺯَﻗَﻪُ ﻣِﻦْ ﺣَﻴْﺚُ
ﻻَ ﻳَﺤْﺘَﺴِﺐُ
“ யார் அதிகமாக பாவமன்னிப்பு
தேடுகிறார்களோ அவர்களுக்கு
அல்லாஹ் ஒவ்வொரு கவலைகளை
விட்டும் நிவாரணம் வழங்குகிறான்
ஒவ்வொரு நெருக்கடிகளை விட்டும்
நீங்க ஒரு வழியை ஏற்படுத்துகிறான்
அவர் அறியாத விதத்திலும் அவருக்கு
வாழ்வாதாரங்களை வழங்குகிறான்.”
பாவமன்னிப்பு தேடுவது
நபிமார்களின் பண்புகளில் ஒன்று.
உயர்ந்த அந்தஸ்திலும் பாவங்களை
விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் என
சொல்லப்படும் நபிமார்கள்
அல்லாஹ்விடம் அதிகம் பாவ
மன்னிப்பு தேடி உள்ளார்கள்.
நபி ஆதம் அலைஹி ஸலாம்
அவர்களும் அவர்களின் மனைவி
ஹவ்வா அலைஹி ஸலாம் அவர்களும்
பாவ மன்னிப்பை தேடியதை அல்லாஹ்
குர்ஆனில் சொளிகிறான்.
ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤْﻨَﺎ ﺃَﻧْﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥْ ﻟَﻢْ ﺗَﻐْﻔِﺮْ
ﻟَﻨَﺎ ﻭَﺗَﺮْﺣَﻤْﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ ﻣِﻦَ
ﺍﻟْﺨَﺎﺳِﺮِﻳﻦَ
7:23. (அதற்கு அவர்கள்) "எங்கள்
இறைவனே! எங்களுக்கு நாங்களே
தீங்கிழைத்துக் கொண்டோம். நீ
எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்
புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள்
நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"
என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.
நபி நூஹ் அலைஹி ஸலாம் அவர்கள்
தேடிய இஸ்திக்பாரை அல்லாஹ்
குர்ஆனில் சொல்கிறான்.
ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻤَﻦْ ﺩَﺧَﻞَ
ﺑَﻴْﺘِﻲَ ﻣُﺆْﻣِﻨﺎً ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ
ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ
71:28. என் இறைவனே! எனக்கும்
என்னுடைய தாய் தந்தைக்கும்,
நம்பிக்கைக் கொண்டவனாக
என்னுடைய வீட்டில் நுழைந்த வனுக்கும்,
(வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை
கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை
கொண்ட பெண்களுக்கும் நீ
மன்னித்தருள் புரிவாயாக! இந்த
அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர
நீ அதிகப்படுத்தாதே!" (என்றும்
பிரார்த்தித்தார்).
நபி மூசா அலைஹி ஸலாம் அவர்கள்
அல்லாஹ்விடம் கேட்ட
பாவமன்னிப்பை அல்லாஹ் குர்ஆனில்
சொல்கிறான்.
ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﻟِﺄَﺧِﻲ ﻭَﺃَﺩْﺧِﻠْﻨَﺎ ﻓِﻲ
ﺭَﺣْﻤَﺘِﻚَ ﻭَﺃَﻧْﺖَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ
7:151. (பிறகு மூஸா இறைவனை
நோக்கி) "என் இறைவனே! எனக்கும்
என் சகோதரருக்கும் நீ பிழை
பொருத்தருள்வாயாக! உன்னுடைய
அன்பிலும் எங்களை சேர்த்துக்
கொள்வாயாக! நீ கிருபை
செய்பவர்களிலெல்லாம் மிக்க
கிருபையாளன்" என்று (பிரார்த்தனை
செய்து) கூறினார்.
நபி தாவூத் அலைஹி ஸலாம் அவர்கள்
பாவமன்னிப்பு தேடிய முறையை
குர்ஆன் சொல்கிறது.
ﻓَﺎﺳْﺘَﻐْﻔَﺮَ ﺭَﺑَّﻪُ ﻭَﺧَﺮَّ ﺭَﺍﻛِﻌًﺎ ﻭَﺃَﻧَﺎﺏَ
இறைவனிடம் தன் குற்றத்தை
மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து
வணங்கி தன் இறைவனை நோக்கி
பிரார்த்தனை செய்தார்.
நபி சுலைமான் அலைஹி ஸலாம்
அவர்கள் செய்த துஆவை குர்ஆன்
சொல்கிறது
ﻗَﺎﻝَ ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﻫَﺐْ ﻟِﻲ ﻣُﻠْﻜﺎً
ﻻ ﻳَﻨْﺒَﻐِﻲ ﻟِﺄَﺣَﺪٍ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻱ ﺇِﻧَّﻚَ
ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ
38:35. ஆகவே, அவர் "என் இறைவனே!
என்னுடைய குற்றங்களை மன்னித்து
விடு! எனக்குப் பின்னர் எவருமே
அடைய முடியாத ஓர் ஆட்சியை
எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக!
நிச்சயமாக நீ பெரும் கொடையாளி"
என்று பிரார்த்தனை செய்தார்.
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் சொன்னார்கள்.
ﺇِﻧِّﻲ ﻟَﺄَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪَ ﻓِﻲ ﻛُﻞِّ ﻳَﻮْﻡٍ
ﻣِﺎﺋَﺔَ ﻣَﺮَّﺓٍ
நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம்
நூறு முறை பாவமன்னிப்பு தேடுகிறேன்.
அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு
அவர்கள் சொன்னார்கள்.
“ நபி சல்லால்லாஹு அலைஹி வ
ஸல்லம் அவர்களை விட அதிகமாக
பாவ மன்னிப்பை வேண்டும் வேறு
யாரிடமும் நான் உட்கார்ந்தது இல்லை. ”
எனவே நபிகள் நாயகம் சல்லால்லாஹு
அலைஹி வ ஸல்லம் அவர்களின்
வழிமுறைகளை நாம் பின்பற்ற
வேண்டும். நம் வாழ்கையில் அதிகம்
அதிகம் பாவ மன்னிப்பை வேண்டி நம்
உள்ள அழுக்குகளையும் கசடுகளையும்
நீக்க வேண்டும்.
நபி சல்லால்லாஹு அலைஹி
வ ஸல்லம் அவர்கள் பர்லான
தொழுகைகளுக்கு பிறகு மூன்று முறை
பாவ மன்னிப்பு கேட்பார்கள்.
முஹ்மீண்களின் பண்புகளில்
ஒன்று அவர்கள் குறிப்பாக
விடயற்காலை அல்லாஹ்விடம் பாவ
மன்னிப்பை வேண்டுவார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்
ﻛَﺎﻧُﻮﺍ ﻗَﻠِﻴﻠًﺎ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻴْﻞِ ﻣَﺎ
ﻳَﻬْﺠَﻌُﻮﻥَ * ﻭَﺑِﺎﻟْﺄَﺳْﺤَﺎﺭِ ﻫُﻢْ
ﻳَﺴْﺘَﻐْﻔِﺮُﻭﻥَ
51:17. அவர்கள் இரவில் வெகு சொற்ப
(நேர)மே நித்திரை செய்வார்கள்.
51:18. அவர்கள் விடியற்காலை
நேரத்தில் (எழுந்து இறைவனை
வணங்கி, தங்கள் இறைவனிடம்)
மன்னிப்புக் கோரிக்
கொண்டிருப்பார்கள்.
நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் சொன்னார்கள்
“யார் ஒரு சபையில் அமர்ந்து அங்கு
அவரின் ( செயலாலோ அல்லது
பேச்சாலோ) தவறுகள் அதிகரித்து
அந்த சபையை விட்டும் எழுவதற்கு
முன்பு “ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻭَﺑِﺤَﻤْﺪِﻙَ,
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ,
ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻚَ ” இந்த
துவாவை செய்தால் அந்த சபையில்
அவர் செய்த குற்றங்கள்
மன்னிக்கப்படும். ”
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻭَﺑِﺤَﻤْﺪِﻙَ , ﺃَﺷْﻬَﺪُ
ﺃَﻥْ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ, ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ
ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴْﻚَ
நீயே பரிசுத்தமானவன். இறைவா! உன்
புக்ழைகொன்டே! உன்னை தவிர்த்து
வேறு கடவுள் இல்லை என நான் சாட்சி
கூறுகிறேன். உன்னிடம் பாவமன்னிப்பு
வேண்டுகிறேன்.
எனவே அல்லாஹ்விடம்
ஆதிகம் அதிகம் பாவமன்னிப்பை
கேட்கவேண்டும். அல்லாஹ் நமக்கு
வழங்கிய இந்த அற்புத வாய்பை நம்
மறுமை வெற்றிக்கு நாம் பயன்படுத்த
வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்
புரிவானாக. ஆமீன்!
[7/1/2015, 2:57 PM] +91 99 42 407358: நோன்பு தந்த பயிற்சி காலமெல்லாம்
நிலைக்கட்டும்!
ஒரு மாதகாலம் பசித்திருந்து
தாகித்திருந்து, பலதியாகங்களை
மேற்கொண்டு புனித ரமழானின்
இனிய நோன்பை கனிவாய்
நோற்றோம்.
இன்று புனித ஈதுல் பித்ர் பெருநாளை
மகிழ்ச்சி பொங்க கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம். இந்நந்நாளில்
புனித ரமழானில் கடந்து வந்த
நாட்களை நினைத்துப் பார்ப்போம்.
புனித ரமழானின் பெறுமதி மிக்க
நாட்களை பயனுள்ள வழியில்
கழித்தோமா? நோன்பின்
நோக்கங்களில் ஒன்றான
இறையச்சத்தை வளர்த்துக்
கொண்டோமா? அல்லது வீண்
விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு
ரமழான் வழங்கிய பாக்கியங்களை
இழந்தோமா? இப்போது முஹாஸபா
செய்து பாருங்கள் ரமழானை எப்படிக்
கழித்தோம்.
புனித ரமழான் எமது உடலுக்கும்
உள்ளத்துக்கும், ஆத்மாவுக்கும் சிறந்த
பயிற்சிகளை வழங்கியது.
அப்பாசறையிலே நாம் பெற்ற பயிற்சி
எமது வாழ்நாள் முழுவதும் நீடித்து
மணம் பரப்ப வேண்டும்.
பாக்கியம் மிக்க ரமழானின் முதற்
பகுதியில் அல்லாஹ் தன் அருளை தன்
அடியார்கள் மீது சொரிந்து தனது
அன்பின் ஆழத்தை
வெளிப்படுத்தினான்.
ஒரு தாய் தன் குழந்தை மீது
வைத்திருக்கும் அன்பைவிடவும் எழுபது
மடங்கு அன்புடையவன் என்பதை
எமக்கு நினைவூட்டினான். அவனது
அன்பு மழையில் நனைந்து நாம் உளம்
உருகினோம். உளப் பூரித்தோம். நாமும்
எமது அன்பை வெளிப்படுத்தி பிறருக்கு
உதவினோம், உபசரித்தோம்.
இந்த நற்குணம் காலமெல்லாம் எம்மில்
நிலைத்து மணம் பரப்ப
வேண்டுமென்பதே ரமழானின்
எதிர்பார்ப்பாகும். “பூமியிலுள்ளோருக்கு
அன்பு காட்டுங்கள் அல்லாஹ்
உங்களுக்கு அன்பு காட்டுவான்” என்ற
நாயக வாக்கை இங்கு நாம் நினைத்துப்
பார்க்கிறோம்.
மனிதர்களிடத்தில் மட்டுமல்ல வாய்
பேச முடியாத எண்ணற்ற ஜீவன்கள்
எம்மைச் சுற்றி வாழ்கின்றன.
அப்படைப்பினங்களிடத்திலும்
அன்புகாட்டி நேசித்து போசிக்க
வேண்டும்மென்ற உயரிய நற்குணத்தை
புனித ரமழான் எமக்கு வழங்கிவிட்டுச்
செல்கிறது.
அடுத்து ‘மஃபிரத்’ என்னும்
பாவமன்னிப்பை மத்திய பகுதியிலே
அல்லாஹ் எமக்கு நினைவுபடுத்தினான்.
பாவங்களை மன்னிப்பது அல்லாஹ்வின்
கருணையின் வெளிப்பாடு என்பதை
அல்லாஹ் அல்-குர்ஆனில்
நினைவுபடுத்துகின்றான்.
ரமழானில் நாம் புரியும் எல்லா
நற்கருமங்களோடும் மஃபிரத்தும்
இணைந்திருப்பதை அவதானித்தீர்களா?
இதோ நபிகள் (ஸல்) அவர்கள்
பேசுகிறார்கள், உளச்சுத்தியோடு
நன்மையை எதிர்பார்த்து நோன்பு
நோற்பதும், தூக்கத்தை தியாகம் செய்து
இரவு காலத்தில் இறைவணக்கத்தில்
ஈடுபடுவதும் லைலதுல் கத்ர் இரவில்
நிலை வணக்கம் புரிவதும்,
நோன்பாளிக்கு நோன்பு துறக்க
உதவுவதும் பாவங்கள்
மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக
அமைகிறது. ரமழானில்
எப்படியெல்லாம் பாவ மன்னிப்பை
அல்லாஹ் வழங்குகிறான் என்பதை
கவனித்துப் பாருங்கள். அடியானின்
பாவமன்னிப்பை அல்லாஹ்
விருப்பத்தோடு ஏற்றுக் கொள்கிறான்.
பாவமீட்சி தேடுபவனைப்பார்த்து
அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான்.
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் குறிப்பிட்டு அல்லாஹ்வின்
கருனையை நினைவூட்டியுள்ளார்கள்.
அடியார்களை மன்னிப்பதும்
அல்லாஹ்வின் கருனையின்
வெளிப்பாடுதான் என்பது இங்கு நன்கு
புலனாகின்றது.
இதன் மூலம் அவசியம் நாம்
கடைப்பிடிக்க வேண்டிய மற்றுமொரு
நற்குணத்தை புனித ரமழான் எமக்கு
நினைவூட்டிச் செல்கிறது. அதாவது
எமக்கு தீங்கிழைத்தவர்களையும், தவறு
செய்தவர்களையும் பெருமனதோடு
மன்னிக்க வேண்டுமென்பதே எம்மில்
ஏற்படவேண்டிய மற்றுமொரு
நற்குணமாகும்.
தெரிந்தோ, தெரியாமலோ எமக்கு
தீங்கிழைத்தவர்களையும் தவறு
செய்தவர்களையும் மன்னிக்கும் சீரிய
நற்குணம் ஒரு துளியாவது எம்மிடம்
உண்டா? என்று இச்சிறப்பு மிக்க நாளில்
சிந்தித்துப்பார்ப்போம்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும்
மன்னிக்கும் பெருந்தன்மையும் இல்லாத
காரணத்தினாலேயே இன்று எமது
சமூகத்துக்கு மத்தியிலே
அமைதியின்மையும், சண்டையும்
சச்சரவும் கோப தாபங்களும் மலிந்து
போயுள்ளன.
குடும்பங்களுக்குள்ளும்
இனபந்துக்கிடையிலும், பொதுச் சமூக
வாழ்விலும் ஏற்படுகின்ற
பிளவுகளுக்கும், சச்சரவுகளுக்கும்
முழுமுதற் காரணம் பிறரை மன்னிக்கத்
தெரியாததாலும், விட்டுக்
கொடுக்காததாலும் ஏற்பட்ட
விளைவுதான் பிற சகோதர
முஸ்லிமின் உணர்வுகளை மதித்து
நடப்பதும், சகிப்புத் தன்மையைப்
பேணுவதும் வீண்வாதப்
பிரதிவாதங்களில் ஈடுபடாதிருப்பதும்
நாவைப் பேணுவதும் ரமழான் எமக்கு
வழங்கிய உயர்ந்த பயிற்சிகளாகும். இந்த
நற்குணங்கள் தொடர்ந்து பேணப்பட
வேண்டும்.
அற்ப காரணங்களுக்காக பிரிந்து இரத்த
உறவைத் துண்டித்து வாழ்பவருக்கு
இதோ இந்த ஈதுல் பித்ர் பெருநாள் நல்ல
சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது.
மன்னிப்பதாலோ
விட்டுக்கொடுப்பதாலோ எந்தக்
குறையும் ஏற்படப் போவதில்லை.
எனவே உறவை மீட்டிக் கொள்ள
இதோ இந்த நல்ல நாளைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
புனித ரமழானில் தான் மக்கா வெற்றி
கொள்ளப்பட்டது.
வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த
அச்சம்பவத்தை ரமழானிலே நாம்
நினைத்துப் பார்க்கிறோம்.
அந்நிகழ்ச்சி எமக்குக் கற்றுத்தரும் பாடம்
என்ன? ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு
ரமழான் மாதம் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் வெற்றி வீரராக சகல பலமும்
பெற்றவர்களாக தங்கள் அருமைத்
தோழர்களுடன் மக்காவுக்குச்
செல்கிறார்கள். எதுவித சிரமமுமின்றி
மக்கா கைப்பற்றப்படுகிறது.
தங்களுக்கும் தம் அருமைத்
தோழர்களுக்கும் இழைத்த
கொடுமைகளுக்காக பழி தீர்ப்பதற்கு
நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
பலம் பெற்ற இந்த வேளையில்
கொடுமையிழைத்த அந்தக்
குறைஷிகளை மன்னித்தார்களே நபிகள்
பெருமானார் (ஸல்) அவர்கள்.
மக்கா வெற்றியை நினைக்கும் போது
நாம் பெற வேண்டிய படிப்பினை
இதுதான். அவர்களை மன்னித்ததால்
நபிகளாருக்கு எக்குறையும்
ஏற்படவில்லை. மாறாக நன்மையே
விழைந்தது. இஸ்லாம் உலகெங்கும்
பரந்து விரிந்து வியாபிக்க இதுவும்
ஒருகாரணமாக அமைந்தது.
எனவே புனித ரமழான்
நினைவுபடுத்தும் இந்நற்குணம்
எம்மிடத்திலும்
ஏற்படவேண்டுமென்பதும் ரமழானின்
எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.
இந்த நற்குணத்தை தவறவிட்டதன்
காரணமாக எத்தனை குடும்பங்கள்
பிரிந்திருக்கின்றன. இஸ்லாம்
வலியுறுத்திய இரத்த உறவுகள்
துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த
வீட்டுக்காரரோடு பேண வேண்டிய
நல்லுறவு முறிந்து போயிருக்கின்றன.
பிரிந்த உறவுகள் சேரவும் பரஸ்பரம்
உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும்
இச்சிறப்புமிக்க நாளை பயன்படுத்திக்
கொள்வோம்.
ரமழானிலே நாம் உரிய நேரத்தில்
தொழுதோம், திருக்குர்ஆனை
ஓதினோம், பிறறை உபசரித்தோம்,
ஏழை எளியவர்களுக்கு உதவினோம்,
உபரியான வணக்கங்களை
நிறைவேற்றினோம், இவை
ரமழானோடு முடிவடை து
விடுவதில்லை. இந்நற்கருமங்கள்
காலமெல்லாம் தொடரப்பட வேண்டும்.
ரமழான் தந்த பயிற்சி தொடர்ந்தும்
எமது வாழ்வில் மணம் பரப்ப வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்
பாலிப்பானாக. ஆமீன்.
No comments:
Post a Comment