Tuesday, November 29, 2022

Why social media..? / Ashika Imthiyaz

 AshikaImthiyaz

Why social media..?



    உலகில் உள்ள பல்வேறு விதமான மக்கள் பல்வேறு விதமாக Facebook போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் உறவுகள் நட்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இருக்கலாம்.

     இன்னும் சிலர், புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு ஆர்வமானவற்றில் அறிவை வளர்த்துக் கொள்ளவும், இன்னும் சிலர் பொழுது போக்கிற்காகவும் சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவது உண்டு. பிசினஸ் தளமாகவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.


     சமூக வலைத்தளங்கள் உருவான புதிதில் அவை பெரும்பாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மக்களை இணைக்கவே, ஒரு தொடர்பு பாலமாக பயன்பட்டன. இப்பொழுது பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ள Meta அதன் இன்னொரு பரிணாமம் என்றே சொல்லலாம். அதன் படி அதன் அல்காரிதங்களும் மாற்றப் பட்டிருக்கலாம். மக்கள் இணைந்து பணியாற்ற, குறிப்பாக Entrepeneurs களுக்கான தளமாக வடிவமைக்கப் பட்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். நீங்க இதை எப்படி பார்க்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள்...

     அதுபோல, நாம் என்ன வகையான சமூக வலைத் தளங்களை பயன் படுத்துகிறோம் என்பதும் இதில் முக்கியமானது. உதாரணத்திற்கு, என்டர்டைன்மென்ட் தொழில்களில் இருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது போல, வேலை தொடர்பாக லிங்க்ட் இன் பயன்படுத்துவது போல, பிறருடன் பழக பேஸ்புக் பயன்படுத்துவது போல... இன்னும் இது போல பல்வேறு தளங்கள் உள்ளன. அந்தந்த தளங்களை நாம் அதன் நோக்கத்திற்காக பயன்படுத்துவது நாம் சமூக வலைதளங்களை productive ஆக பயன்படுத்துகிறோம் என்று பொருள்.

     என்னுடைய வேலை தொடர்பான விஷயங்களுக்கு Linked In மற்றும் பெரும்பாலான செய்திகளை அறிந்து கொள்ள Facebook போன்ற இரண்டு தளங்களை மட்டும் பயன் படுத்துகிறேன். இதை தவிர, வேறு எந்த தளங்களையும் நான் பயன் படுத்துவதில்லை. நீங்கள் எந்த தளங்களை எதற்காக  பயன்படுத்துகிறீர்கள்?

 AshikaImthiyaz

No comments: