நம் "இருப்பு" இந்த மண்ணில்
இல்லாது போவதால் அதற்கு
"இறப்பு" என்று பெயர் வைத்து
விட்டார்கள் அவ்வளே!
மற்றபடி நம்மை விட்டும்
இறந்துபோன மனிதர்கள்
நம்மிடையே எப்போதும் உலவிக்
கொண்டுதான் இருக்கிறார்கள்!
நம் தாயும் தந்தையும்
சேர்ந்து உருவாக்கிய உயிர்
நாம், நாம் நம்முயிர் மூலம்
நம் பிள்ளைகளை
உருவாக்குகிறோம்!
பாட்டனும், பாட்டியும், தாயும், தந்
தையும் விட்டுச் சென்ற
பணிகளை அவர்கள் வழியே
நாம் தொடர்கிறோம், நமக்குப்பின்
நம் பிள்ளைகள் தொடர்வார்கள்!
வாழையடி வழையாய்
இதுவே தொடர்கிறது..!!!
ஒரு நல்லாசிரியர்,
தான் கற்றுக் கொடுத்து
விட்டுப்போன பாடங்களால்
தான் போனபின்னும்
தன் மாணவர்களிடையே
வாழ்கிறார்!
ஒரு படைப்பாளி தான்
படைத்துவிட்டுப்போன
படைப்புகளில் வாழ்கிறார்!
ஊண் தின்று
வளர்ந்த ஊன் மட்டுமே
மண்ணில் ஒளிந்து
கொள்கிறது, ஆனால்
அதன் உயிர் எங்கோ
ஓரிடத்தில் வாழ்ந்து
கொண்டேதான் இருக்கிறது!
நல்லதை செய்து
நல்வழி நடந்து
நாமும் வாழ்ந்து போவோம்,
போனபின்பும் கூட
வாழ்வோம்.... காலங்களை
வென்று நிற்கும்
Mohamed Ali
தந்தை எழுப்பிய நமது
மயிலாடுதுறையின்
அடையாளமாம் மணிக்கூண்டு
போல!
No comments:
Post a Comment