Human Body's..
நான் இந்த உடல் அல்ல,
மனித கூட்டத்தில் என்னை
பிரித்தறிய ஒரு அடையாளம்..!
அடையாளத்தின் மீதே
ஆர்வமும், அக்கறையும்
வைப்பதால்...
அதுமட்டுமே அடுத்தவர்களுக்கு
தெரிகிறது..
நான் இருப்பேன் -இந்த
அடையாளம் அழிந்தப் பின்னும்
இருப்பேன்..
எப்படி தாயின் கருவில்,
தந்தையின் அணுவில்,
இறைவனின் பார்வையில்
எப்படி இருந்தேனோ... அதுபோல்
எப்போதும் நான் இருப்பேன்.,
என் அறிவுக்கே அறியாத
உருவில்.. நான் இருப்பேன்.
நான் இந்த உடல் அல்ல !!
No comments:
Post a Comment