Saturday, September 10, 2022

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அஸீஸ் அன்சாரி...அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

 

யார் இந்த அஜீஸ் அன்சாரி?








சாதாரண கைலி உடுத்தி தேநீர் கோப்பை முன்  கேஷ்யுவலாக அமர்ந்து எளிமையாக காட்சி தருபவர் பெயர் அஸீஸ் அன்சாரி...

.ஆர்.ரஹ்மானுக்கும் முன் "கோல்டன் குளோப்" விருது பெற்ற முதல் இந்தியர், முதல் தமிழன் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..ஆனால் அதுதான் உண்மை...

ஆம்.. அஸீஸ் அன்சாரி ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர்.. குறிப்பாக ஹாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த காமடி நடிகராக வலம் வருபவர்..

நாகர்கோவில் கோட்டாறு புகழ்பெற்ற வழக்கறிஞர் மறைந்த பக்ருதீன் ஆதம் மகள் டாக்டர் ஃபாத்திமா - வாசுதேவநல்லூர் டாக்டர் ஷவுக்கத் அன்சாரி தம்பதியர் மகன்.

தாய் தந்தை இருவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவர்களாக பணியாற்றி வருவதால் அஸீஸ் அன்சாரி பிறந்தது, வளர்ந்தது, கல்வி கற்றது எல்லாமே நியூயார்க்கில் தான்..

2000 வருடத்தில் பள்ளிக்கூட நாட்களில் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் பின்னாளில் தொலைக்காட்சி தொடர்களிலும், திரையுலகிலும் சாதனை படைக்க உதவியது..

தற்போது சினிமா கலைஞர்களின் கனவுலகமான ஹாலிவுட்டில் எழுத்து, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று பன்முகங்களுடன் வலம் வருகிறார்...

2015ம் ஆண்டில் வெளிவந்த

"Master of None" எனும் நெட்ஃபிலிக்ஸ் தொடரில் சிறப்பான நடிப்பிற்காக "கோல்டன் குளோப்" விருது பெற்ற அஸீஸ் அன்சாரி இரண்டு "EMMY" விருதுக்கும் சொந்தக்காரர்.

2019ல் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற இவரது

"Aziz Ansari - Right Now" எனும் ஆல்பம்

GRAMMY Award for Best Commedy Album பிரிவிற்கு தேர்வானது...

அஸீஸ் அன்சாரி சிறந்த எழுத்தாளரும் கூட.. இவர் வெளியிட்ட

"Modern Romance -An Investigation" எனும் புத்தகம் வெளியான வருடத்தில் நியூயார்க்கில் அந்த மாதத்திற்கான சிறந்த இருபது புத்தகங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்கும் சொந்தக்காரர்..

சமீபத்தில் மணமான நிலையில் குடும்பத்தோடு இந்தியா வந்துள்ள  அஸீஸ் அன்சாரி இரண்டு தினங்கள் முன்பு நாகர்கோவிலில் உறவினர்கள், குடும்ப நண்பர்களை சந்தித்து விட்டு சென்றுள்ளார்..

(முதல் போட்டோ மரியாதைக்குரிய

டாக்டர் Vavar F  Habibullah அவர்கள் அளித்த தேனீர் விருந்தின் போது...)

2வது படம் அவரது பெற்றோர்

தகவல் Colachel Azheem

----------------------------------

Vavar F Habibullah








With Hollywood Celebrity

ACTOR AZIZ ANSARI

இன்று மிகவும் பிஸியான

காலை நேரத்தில்...!

நண்பரும் உறவினருமான

அமெரிக்காவின் பிரபல

கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்

டாக்டர் அன்சாரி மற்றும்

குடும்பத்தினருடன் காலை

சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்த

வேளை...!

சமீபத்தில் திருமணமான

அவரது மூத்த மகன்

அஜீஸ் அன்சாரியையும்

அவரது மனைவியையும்

வாழ்த்தி மகிழும் வாய்ப்பு

கிடைத்தது.

அஜீஸ் அன்சாரி

அமெரிக்காவின் பிரபல

ஹாலிவுட் நடிகராவார்.

சமீபத்தில் ஹாலிவுட்டின்

மிகவும் உயர்ந்த விருதான

கோல்டன் குளோப் அவார்ட்

விருது பெற்றவர் இவர்.

மிகவும் எளிமையாக

சாதாரண கைலி கட்டி

ஒரு ஓரத்தில் அமர்ந்து

பிரபல ஹாலிவுட் நடிகர்

என்ற பந்தா ஏதுமன்றி...

அவர் உணவு அருந்துவதை

பார்த்த எனக்கு நமதூர்

ரஜினியின் சிம்பிளிஸிடி

தான் ஞாபகம் வந்தது.

நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன் போஸ்ட்

நிருபர்கள், இதுபோன்ற

அவரது ஸ்பெசல் ஃபோட்டோ

ஷாட்டுக்காக அலையும்

நேரம், எனக்கு மட்டும்

அவரது ஒரு ஸ்பெசல்

படம் கிடைத்தது.

இந்த படத்தை எடுத்து

எனக்கு அனுப்பி வைத்தவர்

அவரது  தந்தை நண்பர்

டாக்டர் அன்சாரி.

Actor Aziz Ansari is the

Grandson of Nagercoil

Famous Lawyer Fakrudeen



கீழ் உள்ளதனை கிளிக் செய்து பார்க்கவும்  

யார் இந்த அஜீஸ் அன்சாரி?

ஹாலிவுடும் கோட்டாறும்

No comments: