Wednesday, January 10, 2018

ஹாலிவுடும் கோட்டாறும்



 With my friend Dr Ansari ( father of Aziz Ansari) Dr Ansari too acted in the film
MASTER OF NONE
இன்று காலையிலிருந்து மூன்று முறை
சென்னை ஹிந்து ஆங்கில நாளிதழ் அலுவகத்திலிருந்து என்னை அலை பேசியில் அழைத்தார்கள்.என்னை அழைத்து அழகாக உரையாடியவர் ஹிந்து ஆங்கில நாளிதழின் சப் எடிட்டர் திரு கோலப்பன் அவர்கள்.
ஹாலிவுட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோல்டன் குளோப் விருதினை பெற்ற நாஞ்சில் நாட்டின் தமிழ் இளைஞன் அஜீஸ் அன்சாரி எனது உறவினர் என்ற முறையில் சில தகவல்களை கேட்டு பெறவே அழைத்ததாக கூறினார்.
பிரபல ஹாலிவுட் நடிகரான அஜீஸ் அன்சாரி நாகர்கோவில் காரர்.தந்தை டாக்டர்அன்சாரிஅமெரிக்காவில் பிரபல மருத்துவர். தாயார் கோட்டாறு இடலாக்குடியை சார்ந்த பிரபல வழக்கறிஞர் பக்ருதீன் ஆதத்தின் மகள்.
அஜீஸ் அன்சாரி ஒபாமாவின் நண்பர்.
ஓபாமாவின் குழந்தைகள் இவரது ரசிகர்கள்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவரது வீடு உள்ளது.

லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இவரது பரம ரசிகர்கள்.மத - இன உணர்வுகளை கடந்த மத நல்லிணக்க கருத்துக்களை தனது படங்களின் வாயிலாக இவர் வெளிப்படுத்தும் விதம் தியேட்டர்களை அதிர வைக்கிறது.
மாஸ்டர் ஆப் நன் (MASTER OF NONE) என்ற டிவி தொடரின் நாயகனாக வலம் வரும் இவர் தனது தாய் தந்தையரையும் படத்தில் நடிக்க வைத்து அமெரிக்க வாழ் இந்தியரின் வாழ்க்கையை தத்ரூபமாக வெளிப்படுத்திய விதமே இவரை ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்
என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவப் படுத்தி இருக்கிறது.கோல்டன் குளோப் விருதினை பெற முற்றிலும் தகுதியான நபர் இவர் என்று அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம் சூடி மகிழ்கின்றன.
இன மத பேதங்களற்ற ஓற்றுமையான நல் அமெரிக்க சமூகத்தை உருவாக்க தன் கருத்துக்கள் பயன் பெற வேணடும் என்பதே இந்த அமெரிக்க தமிழ் இளைஞரின் அவா. அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து இவர் எழுப்பும் கண்டனக் குரல்கள் அமெரிக்க மக்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க தூண்டுகிறது என்றால் அது மிகை அல்ல.
அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதி ஓரு இந்தியராக வர வாய்ப்புகள் அதிகம் என்று ஓபாமா ஓரு முறை சொன்னார். அஜீஸ் அன்சாரி அவர் கனவை நிறைவு செய்வார் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
I wish him all success in life
Vavar F Habibullah
---------------------------------------------------------
Aziz Ansari, ‘Master of None’ and the MGR connection
B. Kolappan

MASTER OF NONEAziz Ansari has visited India and can converse in Tamil

The first Asian to win the Golden Globe Award for the Best Actor — Television Series Musical or Comedy, Aziz Ansari traces his roots to verdant Tirunelveli. His parents Shoukath Ansari, a gastroenterologist, and Fatima immigrated to the U.S. in the 1970s.

In Master of None, a comedy series on Netflix, Ansari plays Dev Shah, a struggling actor in New York, and is loosely based on Ansari’s own experiences.

Ansari’s parents stepped forward to play his on-screen parents in the popular series. The conversations include snatches of Tamil.

MGR songs

Read mire Aziz Ansari, ‘Master of None’ and the MGR connection

No comments: