வேரூன்றி
விட்ட நிறவெறிகளின் நிலைமாறி போனாலும்,
அனைவரும்
சமம் என்ற
அண்டப்புழுகின்
துளிர்
அழிய வில்லை.
கறுப்பு
தான் இந்த உலகம்-அதில்
வெளிச்சம்
பாய்ச்சினால் பல
வண்ணமாக
தெரிகிறது..!
இருளின்
கருப்பில் தான்
எத்தனை
அமைதி..
ஏன் இந்த இளக்காரம்
கருப்புக்கு
மட்டும்..?
இனவெறியில்
துவக்கியதே
இந்த கருப்பின் கதை கருவு..
விருப்பத்தை
வெளிப்படுத்த
வெள்ளையையும்,
கஷ்டத்தை,
கண்டனத்தை..
சோகத்தை
வெளிப்படுத்த ,
கருபென்ற
கருத்தை விதைத்த
கதை தொடர்கிறது..
இறப்புக்கு
இரங்கல் உடுப்பே
கருப்பாடை,..
இழப்புகள்
நிகழ்ந்த நாட்கள்
கருப்பு
நாள் ...
கணக்கில்
பதுக்கியது எல்லாம்
கருப்பு
பணம்..
கருப்புக்கு
மட்டும் ஏன்
இத்தனை
எதிர்ப்பு,
இவ்வளவு வெறுப்பு....??
எல்லா வண்ணங்களுக்கும்
திண்ணமாக
தெரியும்,
கருப்பு
நினைத்தால் நம்மை
கருவறுத்து
கலைத்து விடும் என்று..
ஆகையால்
தான்...
வெள்ளை
மாளிகையில் ,
வெள்ளையனே
வெள்ளைக்
கொடி வீசி ,
கருப்பர்களோடு
கைகளை
குலுக்கி
விட்டான்..
நேற்றைய
பிறப்பு காரன்
கருப்பு சட்டைக்காரன்
கருத்தில் கெட்டிக்காரன்..#
No comments:
Post a Comment