Wednesday, September 21, 2022

நீடூர், கந்தணம்புத்தூர், அருவாப்பாடி, திருவிழந்தூர் என்கிற திரு இந்தளூர்னு எல்லாமே...

 


சில தினங்களுக்குமுன் சில அலுவல்களுக்காக  நண்பர் ஒருவரைச்சந்திக்க  வைத்தீஸ்வரன்கோவில் சென்றபோது அவரது இல்லத்தின் கூடத்து அலமாரியில் இந்த நூல் கண்ணில் தென்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோதே என் கவனம் அந்நூலின் பக்கம் திரும்பியதை உணர்ந்தவர் திருஇந்தளூர் உங்க ஊருக்கு பக்கத்து ஊராச்சே இல்லையா என்று கேட்டுட்டு அந்த நூலை எடுத்துவாசிக்க கொடுத்தார்.

சில பக்கங்கள் வாசிக்க துவங்கும்போதே எல்லாம் எம் இருப்பிடம் சுற்றிய வரலாற்று குறிப்புகளாகவே இருந்ததை கண்டு வியந்தேன்.

இந்த பகுதியின் நிலங்களில் பெரும்பங்கு 300 வருடங்களுக்கு முன்வரை கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் ராஜேந்திர சோழர்களுக்கு (ராஜ ராஜ சோழ பரம்பரையினர்)சொந்தமாக இருந்ததாம் !

நீடூர், கந்தணம்புத்தூர், அருவாப்பாடி, திருவிழந்தூர் என்கிற திரு இந்தளூர்னு எல்லாமே அவர்களின் ஆளுமை உரிமைகளுக்கு உட்பட்ட எல்லைகளாம்

இந்த விபரமெல்லாம்.  2010ஆம்    ஆண்டு ஆனந்தாண்டவபுரம் உடைந்த சிவன்கோவிலுக்கு கீழே கிடைத்த இந்தியாவிலேயே இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய செப்பேடு (57 தொகுப்புகளாக)சொல்லுதாம்...

மேலும் படிக்கையில்...நாம  வாழ்ந்து சுவாசிக்கும்.ஏரியா முழுக்கவே வாறதுங்கோ சிட்டிசன் சினிமால காணாமற்போன அத்திப்பட்டு கதை போல.. இதிலும் பல அதிர்வான சம்பவங்கள் சொல்லப்படுகிறது..

Gajini Ayub


இந்நூலின் முதல் பதிப்பு 1916ஆம் ஆண்டு மாயூரம் கமலா பிரஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டது

24. முனையடுவார்

வீடார் தொடைக்கும் படைக்கும்இவன்

மேலோன் என்ன வேந்தருக்குத்

தேடார் வலியார் எண்ணாரைச்

செகுத்துப் படைத்த செழும்பொன்எலாம்

நீடாது அளித்து முனையடுவார்

நீடூர் அமர்ந்து நெறிசேர்ந்தார்

வாடாது இருக்கும் அரசிருப்பு

வளம்சேர் சோழ மண்டலமே.

நீடுர் என்னும் தலத்தில் அவதரித்த முனையடுவார் என்பார் தம்மை வந்து ஒத்தாசைக்கு அழைப்பவரோடு சென்று பகைவரை வென்று அதனால் கிடைத்த செல்வம் முழுவதையும் ஈசனுக்கும், ஈசன் அடியாருக்குமே செலவழித்துப் பரகதி அடைந்தார்.

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0582.html


No comments: