இஸ்மாயில்
அன்சாரிக்கு கோல்டன் குளோப் விருது
-5 தகவல்கள்
8 ஜனவரி
2018
அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி
பட மூலாதாரம்,KEVIN WINTER
75வது கோல்டன் குளோப் விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக
கொண்ட அமெரிக்கருக்கு விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவில்
சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக
ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் எனும்
விருது வழங்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவில்
நடைபெற்ற 75வது கோல்டன் குளோப்
விருதுகளில் தொலைக்காட்சித் தொடர்களுக்கான இசை அல்லது நகைச்சுவைப்பிரிவில்
சிறந்த நடிகர் விருது அஸீஸ்
இஸ்மாயில் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாஸ்டர்
ஆஃப் நன் என்னும் தொலைக்கட்சித்
தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அன்சாரி கடந்த ஆண்டும் கோல்டன்
குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை.
அஸீஸ் இஸ்மாயில் அன்சாரியின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அஸீஸ் பிறந்து வளர்ந்தது
அமெரிக்காவில்தான். 34 வயதாகும் அஸீஸ் அன்சாரிக்கு தமிழ்
மொழி பரிச்சயம்.
நெட்பிளிக்ஸில்
வெளியாகும் இணைய தொலைக்காட்சித் தொடரான
மாஸ்டர் ஆஃப் த நன்
(MASTER OF THE NONE) தொடரை
அலன் யங் என்பவனுடன் இணைந்து
தொடங்கினார்.
அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி
பட மூலாதாரம்,FREDERIC J. BROWN
2015-ல்
இருந்து வெளிவரும் இத்தொடரில் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அன்சாரி
ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களிலும்
சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
75வது கோல்டன் குளோப் விருது நிகழ்வில் டைம்ஸ் அப் இயக்கத்திற்கு ஆதரவாக பல நடிகர் நடிகைகள் உடைகளை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களோடு ஒற்றுமையாக நிற்க தொடங்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோல்டன் குளோப் விருது அரங்கில் கருப்பு நிற உடையும், டைம்ஸ் அப் பேட்ஜும் அணிந்து வந்திருந்தார் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி.
(ஆரம்ப வாழ்க்கை அசீஸ் அன்சாரி கொலம்பியா, தெற்கு கரோலினாவில் பிறந்தார். இவர் தமிழ்நாடு,இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர்
நன்றி
பிபிசி தமிழ் :
No comments:
Post a Comment