Sunday, February 7, 2021

THE MAN OF HEART

 


THE MAN OF HEART

சென்னையின் புகழ்பெற்ற

காவேரி மருத்துவமனையின்

இதய சிகிச்சைப் பிரிவு

தலைவர், எனது அருமை தம்பி

டாக்டர் கோபால முருகன்

லண்டனில் மிக நீண்ட காலம்

புகழ்பெற்ற மருத்துவமனை

களில் பணி புரிந்த இந்த

இதய நிபுணர், இதய அறுவை

சிகிச்சையில்  வல்லுநர்.

பழுதடைந்த இதய வால்வுகளை

அடைபட்ட இதய குழாய்களை

நுண்துளை அறுவை சிகிச்சை

மூலம் லேசர் வழி சரி செய்வதில்

வல்லவர். உலக இதய சிகிச்சை

வரலாற்றில் உயர்  தொழில்

நுட்பங்களைக் கையாண்டு

வெற்றி பெற்றமைக்காக

கின்னஸ் புக் ஆப் ரிகார்ட்ஸில்

இடம் பெற்றவர். பல நேசனல்

இண்டர் நேசனல் அவார்ட்களை

விருதுகளை பெற்றவர்.

இவர் சென்னையில் இருப்பதா

லேயே இந்தியாவின் பிரபல

மருத்துவமனைகள் சிக்கலான

இதய நோயாளிகளை இவரிடம்

மேல் சிகிச்சைக்காக அனுப்பி

வைக்கின்றன. நெஞ்சை

பிளந்து செய்யும் பைபாஸ்

அறுவை சிகிச்சை பழைய

முறை என்று மிகவும் கூலாக

சொல்கிறார். இதய நோய்

என்றால் பேசாமல் இவரிடம்

தஞ்சம் புகுந்து விடலாம் என்று

எனக்கே தோன்றுகிறது.

இரு வருடங்களுக்கு முன்

நான் அழைத்தின் பேரில்

நாகர்கோவில் வெள்ளமடம்

குழந்தைகள் மருத்துவமனை

யில் பிரபல டாக்டர்கள் மத்தியில்

இதய சிகிச்சையில் புதுமைகள்

என்ற தலைப்பில் இவர் பேசிய

உரை பல மருத்துவர்களை

வியக்க வைத்தது.

நாகர்கோவில் நகரில் ஒரு

இதய நோய் முகாம் ஒன்றை

இவரது தலைமையில் எங்களது 

SHADE டிரஸ்ட் விரைவில்

நடத்த உள்ளது. இதய நோய்

கண்டவர்கள் இவரை எளிதில்

அநுகலாம். ஏழைகளுக்கும்

இலவசமாக சிகிச்சை அளிக்க

விரும்பும் நல் இதயம் கொண்டவர்

இந்த இதய சிகிச்சை வல்லுநர்

தம்பி டாக்டர் கோபால முருகன்.

நேற்று, சென்னை காவேரி

மருத்துவமனையில் அவரை

சந்தித்து உரையாடிய போது

To know more about him

Visit his website

gopalamurugan.com



Vavar F Habibullah

No comments: