நான் தான் மண்பானை - - நான்
இந்த நிலை அடைவதற்கு முன்
பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறேன்.....
எதற்குமே
பயன் படாத களிமண்ணாக இருந்தேன்..
நீர் ஊற்றி பல கால்களால்
மிதிக்கப் பட்டேன்..
குயவனின்
கரங்களால் அவன்
விருப்பப்படி
என் கழுத்து நெரிக்கப்பட்டு,
உடையாமல்
உறுதிப் படுத்த
நெடுநேரம்
நெருப்பில் எரிக்கப்
பட்டேன்..
மதிப்பும்,
மரியாதையும் எனக்கு
குறைவு
தான்...
இருந்தாலும்,
என்னுள்
நீரை
ஊற்றி வையுங்கள் குளிராக
தருகிறேன்--
என்னை
மீண்டும்
நெருப்பில் வைத்து
சமையுங்கள்
சுவையாகத்
தருகிறேன்...
அன்பாக
தட்டுங்கள்
அழகான தாளம் வரும்..
உடைத்து
விடாதீர்கள், ஒரு நாள்
நான் தேவைப் படும் ..
அது உங்களுக்கும் எனக்கும்
இருதி நாளாகக் கூட இருக்கலாம்..
நான் (நானும்) தான் மண்பானை..!
Haja Maideen
NIDUR HAJA


No comments:
Post a Comment