Thursday, February 4, 2021

எல்லோரும் போற்றும் யா ரஸுலல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் போற்றும்  யா ரஸுலல்லாஹ் அஸ்ஸலாமு  அலைக்கும் 

அல்லாஹ்வின் தூதாரே  ஸலாம் அலைக்கும்

 

 அல்லாஹ்வின் தூதரே யா முஸ்தபா

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் போற்றும் யா ரசூலுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் போற்றும் யா ரசூலுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்

 

முன்னோனின் மார்க்கம் ஏற்று

முதலில் ஈமான் கொண்டோரே

மன்னர் நபி மகிழ்ந்த

மாண்புமேவும் துணைவி நீரே

வாழ்க்கை துணைவி நீரே

பண்போங்கிடும் ஹதீஜா அன்னையே

அஸ்ஸலாமு அலைக்கும்

 

நல்லார் நபி மஹமூத்

நெஞ்சு வந்த மாமணியே

பல்லாயிரம் ஹதீஸை

பாடம் செய்த தீன் கனியே

இன்ப தீன் கனியே

வல்லோர் புகழ் ஆயிஷா அன்னையே

அஸ்ஸலாமு அலைக்கும்

 

அண்ணல் ரசூலுல்லாஹ்வின்

அன்பு மேவும் கண்மணியே

அன்னை கதீஜா ஈன்ற

ஆருயிரே விண்மனியே

ஜோதி விண்மனியே

பெண்கள் தலைவியான பாத்திமா

அஸ்ஸலாமு அலைக்கும்

 

பாரோர் புகழ்ந்து போற்றும்

பாத்திமாவின் மணாளரே

பெரோங்கும் ஞானமெல்லாம்

தேர்ந்த தூய குணாளரே

தூய குணாளரே

வீரம் நிறைந்த அலி மேதையே

அஸ்ஸலாமு அலைக்கும்

 

அன்பான நபி புகழ்ந்த

அபு பக்கர் சித்தீகே

உண்மை மிகுந்தவரே

உமர் கத்தாபே உதுமானே

சாந்த உதுமானே

தன்னிகரில்லாத கலீபாக்களே

அஸ்ஸலாமு அலைக்கும்

 

வஞ்சகர் ஆட்சி செய்த

முடிஅரசை எதிர்த்தீரே

அஞ்சாமல் கர்பலாவின்

போரில் ஷஹீத் ஆனீரே

ஷஹீத் ஆனீரே

அஞ்சாத வீரரே இமாம் ஹுசைன்

அஸ்ஸலாமு அலைக்கும்

 

 

 

வல்லோன் விரும்பும்

நபி மார்களே ஸஹாபாக்களே

பொல்லாத பத்ரு போரில்

ஸஹீதான பத்ரீன்களே

வீர பத்ரீன்களே

சொல்லாற்றல் வாய்ந்த குத்துபுமார்களே

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் தூதரே யா முஸ்தபா

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

பாடல் பாடியவர்: தேரிழந்தூர் தாஜுதீன்


No comments: