Saturday, February 27, 2021

சுப்ஹூ சிந்தனை. சுஹைபு மிஸ்பாஹி அவர்கள். நீடூர் நெய்வாசல் ஜின்னா தெரு பள்ளி

Introduction to Arabic, Ottoman & Persian Calligraphy

 

Introduction to Arabic, Ottoman & Persian Calligraphy from Elisabeth Kvernen on Vimeo.

WHY DO WE SAY "AAMEEN" AFTER THE SUPPLICATION? WHAT IS THE MEANING OF AAMEEN? IS THIS SUNNAH TO SAY AAMEEN?

 


WHY DO WE SAY "AAMEEN" AFTER THE SUPPLICATION? WHAT IS THE MEANING OF AAMEEN? IS THIS SUNNAH TO SAY AAMEEN?

why do we say  Aameen

during...

  Aameen

 

 

why do we say ameen during our prayers?

 

 

 

Mu' meneen Brothers and Sisters,

 

As Salaam Aleikum wa Rahmatullahi wa Barakatuh. (May Allah's Peace, Mercy and Blessings be upon all of you)

 

ஏகத்துவம் ஓரிறைக் கொள்கை

 

*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்பெயரால்...*

———————————————-

*தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்*

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

*So do not lose heart, nor fall into despair, for you must gain mastery if you are true in faith.*

(3. *Aal-E-Imran,* Ayah 139)

Wednesday, February 17, 2021

திருமண வாழ்த்து

 


திருமண வாழ்த்து

(உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி)

 

அன்பே என்று அழைத்திடுங்கள்!

 

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

 

இதயங்களை ஈந்திடுங்கள்!

 

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

 

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

 

ஊடல்களை மறந்திடுங்கள்!

 

எளிமைக்கு வழிவிடுங்கள்!

 

ஏழ்மைக்கு உதவிடுங்கள்!

 

ஐயங்களை அழித்திங்கள்!

 

ஒரு யுகம் கடந்திடுங்கள்!

 

ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!

 

ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!

 

 

98 - நபிகளார் மொழிந்த திருமண கவிதை (பாகம்- 8)

LIVE: Interaction with students at Bharathidasan College for Women, Puducherry.

 

Tuesday, February 16, 2021

ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




 

ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

... பிப்ரவரி 17

ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

மயிலை தயாராகிறது..

நீடூர் ஹாஜி சி.. அப்துல் காதர் சாஹிப் நுழைவு வாயில்..

 


 

பாங்கும் துஆவும் C all to prayer (adhān)and Dua

Monday, February 15, 2021

நான் தான் மண்பானை

 


நான் தான் மண்பானை - - நான்

இந்த நிலை அடைவதற்கு முன்

பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறேன்.....

எதற்குமே பயன் படாத களிமண்ணாக இருந்தேன்..

நீர் ஊற்றி பல கால்களால் மிதிக்கப் பட்டேன்..

குயவனின் கரங்களால் அவன்

விருப்பப்படி என் கழுத்து நெரிக்கப்பட்டு,

உடையாமல் உறுதிப் படுத்த

நெடுநேரம் நெருப்பில் எரிக்கப்

பட்டேன்..

Sunday, February 14, 2021

உளத்தூய்மை (தூயஎண்ணம்)

இது காதல் மாதம் / M.m. Abdulla.

தந்தையார் ....

தந்தையார் ....

குடும்பங்கள் குதூகலித்திட

செறிவான அறிவூட்டுகிற

தலைவராம் தந்தை

உழைத்து உயருமிடம்

வாழ்கையெனும் சந்தை ....

பாசமாய் அமருமிடம்

பிள்ளைகளின் சிந்தை

அன்பெனும் காற்றடைத்து

Friday, February 12, 2021

பெண்மையே பேரின்பம் Suhaina Mazhar

 

பெண்மையே பேரின்பம்

Suhaina Mazhar

- இதை நான் சொல்லல...

நபி(சல்) அவர்கள் சொல்லி இருக்காங்க, தமக்கு பிடித்த மூன்று விஷயங்களில் பெண்களும் ஒன்று என்று...

காசு, பணம், செல்வம், செல்வாக்கு, பதவி என எது இருந்தாலும் கூட ஒரு பெண் இல்லையென்றால் அவன் வாழ்க்கை முழுமை அடையாது. பெண்மையின் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது என்று ரசனையுள்ளவர்கள் சொல்வார்கள்...

நபி(சல்) அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருந்ததைப் போலவே தான் காதலிலும் சிறந்தவர்களாக இருந்தார்கள். நபியவர்கள் கதீஜா பிராட்டியார் மீது கொண்ட காதல் நிகரற்றது.

இல்லத்தரசிகளுக்கு இந்த கவிதை #சமர்ப்பணம்.../ Suhaina Mazhar

 

கண்களின் கண்ணீர் முட்டிக் கொண்டிருக்கும்

சிந்தினால் தலைபாரம் வேற

தனியாகக் கொல்லுமேயென

கட்டுப்படுத்திக் கொள்ளும்

இல்லத்தரசிகளுக்கு இந்த

கவிதை  #சமர்ப்பணம்...

வேலைகளை வேகமாய் முடித்து விட்டு

வீட்டாரின் பசியை ஆற்றி விட்டுத்

திரும்பிப் பார்ப்போம்

வயிற்றைக் கிள்ளும் பசி

சட்டியில் ஏதுமிருக்காது

சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்...

Music

 

Thursday, February 11, 2021

அன்புடன் வாழ்த்துக்கள் கணியூர் இஸ்மாயீல் நாஜி அவர்களுக்கு


அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் வணக்கமே!

 

அனுமதிக்கப்பட்ட செயல்கள்

அனைத்தும் வணக்கமே!

 -----------கணியூர் இஸ்மாயீல் நாஜியின்

ஜும்மா உரையிலிருந்து

**;********************************

லால்பேட்டை அரபிக் கல்லூரியில் நான் கல்வி பயிலும்  பொழுது முப்தியுல் அஃலம்கைருல் மில்லத்அல்லாமா அப்துல்லாஹ் ஹஜரத ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “ துன்யாவை வெறுக்க வேண்டும், துன்யாவிற்காக வாழக் கூடாது என்கிறார்களே. #துன்யா என்றால் என்ன??’ என எங்கள் வகுப்பில் கேட்டார்கள்.

இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்றார் ஒருவர். திருமணம் செய்து குடும்பம் நடத்துவது துன்யா என்றால் அல்லாஹ்வும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதனை ஏன் வலியுறுத்தியுள்ளார்கள் என்றார்கள் ஹளரத்.

கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்

 


கணியூர் நாஜி யின் முக நூல் துஆக்கள்

முகநூலில் நான் பதிவு செய்த துஆக்கள். ஒவ்வொரு நாளும் என் மன நிலையை பிரதிபலிக்கும் பிரார்த்தனைகள்

காலை துஆ

யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே!

 

 உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே!

 

 விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே!

 

 சக்தியுடையவனே! தேவையற்றவனே!

 

 பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே!

 

 வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே!

 

அனைத்தையும் அறிந்தவனே!

மறுமை குறித்த ஓர் விவாதம்!

Tuesday, February 9, 2021

பிறந்த_ஊரைப்பற்றி_எத்தனைமுறைச்_சொன்னாலும்_திகட்டாது ../Abu Haashima

 

Abu Haashima

#பிறந்த_ஊரைப்பற்றி_எத்தனைமுறைச்_சொன்னாலும்_திகட்டாது ..

#செத்தாலும்_இந்த_மண்ணில்தான்

#சாவோம் ...

#கோட்டாறு ...

மனித நாகரீகத்தின் பிறப்பிடம்.

ஆதம் நபியின் காலடிகள் பதிந்த பூமி.

யூப்ரடீஸ் டைகிரீஸ்

நதிக்கரை நாகரீகங்களைப்போல

பெரியாறு

மேலாறு

சிற்றாறு என

எத்தனையோ ஆறுகள் ஓடிய

நாகரீக பட்டணம் கோட்டாறு.

சடப்பொருட்கள் உயிர்பெற்ற தருணங்கள் #நிஷாமன்சூர்

பிரபஞ்சம் அணுக்களால் ஆனது. அணுக்களின் கூட்டமைப்பு மூலம் வடிவங்களும் உருவங்களும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களும் உருவாகின. ஒரு மரம் பூத்து காய்த்து கனி கொடுக்கும்போது மட்டுமே  உயிருள்ளதாக இருப்பதில்லை. வெட்டுப்பட்டு கதவாகவோ மேசையாகவோ நாற்காலியாகவோ அலமாரியாகவோ உருமாறிய பிறகும் உயிரோட்டம் மிகுந்த பொருட்களாகவே மனிதன் பயனுற சேவையாற்றுகின்றன. எனினும் எந்த இடத்தில் எந்த ரூபம் எடுக்கின்றனவோ அதற்கேற்றாற்போல் நன்மை பயப்பனவாகவோ அல்லது தீமைக்கு உடந்தையாகவோ ஆகி விடுகின்றன.

முஸ்லிம்கள் என்னுடைய சகோதரர்கள் | நடிகர் சிவகுமார்

 

Coke Studio Special | Asma-ul-Husna | The 99 Names | Atif Aslam

சுமப்பதில் சுகம் சுமையே தெரியாத சுமை

 


பத்தினி வேண்ட மாதம் மும்மாரி பெய்யும்

மணமாகி வரவேண்டியது வராமல் 'மாதம்' மும்மாதமாக

கணவன் காதில் போட்டு வைக்க

'கள்ளி இத்தனைநாள் மறைத்து வைத்தாயே !'

இனிய முத்தங்கள் அடை மழையாய் பெய்ய

நான் என்னை மறந்தேன்

நீங்க யார் !

 

Sunday, February 7, 2021

THE MAN OF HEART

 


THE MAN OF HEART

சென்னையின் புகழ்பெற்ற

காவேரி மருத்துவமனையின்

இதய சிகிச்சைப் பிரிவு

தலைவர், எனது அருமை தம்பி

டாக்டர் கோபால முருகன்

லண்டனில் மிக நீண்ட காலம்

புகழ்பெற்ற மருத்துவமனை

களில் பணி புரிந்த இந்த

இதய நிபுணர், இதய அறுவை

சிகிச்சையில்  வல்லுநர்.

உறவும், பாசமும்,மார்க்கமும்(மதமும்)

International Award Winning Tamil Short Film - Kuppaikkaaran

DISEASE Short Film / Nominated For International Short Film Festivals Dr...

Saturday, February 6, 2021

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் .

 


அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் .

.1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்

2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.

3. அல் மலிக் = மன்னன்.

4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.

5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்

.6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.

7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.

8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்

.9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.

10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.

11. அல் காலிக் = படைப்பவன்.

மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் சுதந்திர போராட்ட வரலாறுகள்

விந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்

 

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகள் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,
திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.
5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!
6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்
7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.


அவரின் கேள்வி எனனவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல் முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான் என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்றதோடு "விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?" என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி ஒன்றையும் கேட்டிருந்தார்!


அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
1) அல்லாஹ் - அல்லாஹ்
2) அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
3) அர்ரஹீம் - நிகரற்ற அன்புடையவன்
4) அல் மலிக் - பேரரசன்
5) அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன்
6) அஸ்ஸலாம் - சாந்தி மயமானவன்
7) அல்முஃமின் - அபயமளிக்கிறவன்
8) அல்முஹைமின் - பாதுகாப்பளிக்கிறவன்
9) அல் அஜீஜ் - யாவற்றையும் மிகைத்தவன்
10) அல் ஜப்பார் - அதிகாரத்தன்மையுள்ளவன்
11) அல் முதகப்பீர் - பெருமைக்குரியவன்
12) அல் காலிக் - படைக்கிறவன்
13) அல் பாரிஉ - புதிதாக உண்டாக்குகிறவன்
14) அல் முஸவ்விர் - உருவம் அமைக்கிறவன்
15) அல் ஙஃப்பார் - அதிகம் மன்னிக்கிறவன்
16) அல் கஹ்ஹார் - அடக்கியாள்கிறவன்
17) அல் வஹ்ஹாப் - பெருங்கொடையாளன்
18) அர் ரஜ்ஜாக் - உணவளிக்கிறவன்
19) அல்ஃபத்தாஹ் - வெற்றியளிக்கிறவன்
20) அல் ஙலீம் - மிக்க அறிந்தவன்
21) அல் காபிள் - இறுக்கிப் பிடிக்கிறவன்
22) அல் பாஸித் - விரிவாக வழங்குகிறவன்
23) அல்ஃகாபிள் - தாழ்த்துகிறவன்
24) அர்ராஃபிஃ - உயர்த்துகிறவன்
25) அல்முஇஜ்ஜூ - கண்ணியமளிக்கிறவன்
26) அல்முதில்லு - கேவலப்படுத்துகிறவன்
27) அஸ்ஸமீஉ - செவியேற்கிறவன்
28) அல் பசீர் - பார்க்கிறவன்
29) அல் ஹகம் - தீர்ப்பளிக்கிறவன்
30) அல் அத்லு - நீதியாளன்
31) அல்லதீஃபு - உள்ளன்புள்ளவன்
32) அல் கபீர் - செய்தி அறிகிறவன்
33) அல் ஹகீம் - சாந்தமுள்ளவன்
34) அல் அளீம் - மகத்துவமிக்கவன்
35) அல்ஙஃபூர் - மிக மன்னிக்கிறவன்
36) அஷ்ஷகூர் - நன்றி பாராட்டுகிறவன்
37) அல் அலிய்யு - உயர்வானவன்
38) அல் கபீர் - மிகப் பெரியவன்
39) அல் ஹஃபீள் - பாதுகாக்கிறவன்
40) அல் முகீத் - உணவை உற்பத்தி செய்கிறவன்
41) அல் ஹஸீப் - போதுமானவன்
42) அல் ஜலீல் - மாண்புமிக்கவன்
43) அல் கரீம் - சங்கைக்குரியவன்
44) அர்ரகீப் - கண்காணிக்கிறவன்
45) அல் முஜீப் - முறையீட்டை ஏற்பவன்
46) அல்வாஸிஃ - விசாலமானவன்
47) அல் ஹகீம் - ஞானமுள்ளவன்
48) அல் வதூத் - உள்ளன்புமிக்கவன்
49) அல் மஜீத் - மேன்மைக்குரியவன்
50) அல் பாஇஸ் - இறந்தவர்களை எழுப்புகிறவன்
51) அஷ்ஷஹீத் - சாட்சியாளன்
52) அல்ஹக் - உண்மையாளன்
53) அல் வகீல் - பொறுப்பேற்கிறவன்
54) அல்கவிய்யு - வல்லமைமிக்கவன்
55) அல் மதீன் - உறுதி வாய்ந்தவன்
56) அல் வலிய்யு - உதவியாளன்
57) அல் ஹமீத் - புகழுக்குரியவன்
58) அல் முஹ்ஸீ - சூழ்ந்து அறிகிறவன்
59) அல் முப்திஉ - ஆரம்பமாக உண்டாக்குகிறவன்
60) அல் முயீத் - மீளவைக்கிறவன்
61) அல் முஹ்யீ - உயிர்ப்பிக்கிறவன்
62) அல் முமீத் - மரணிக்கச் செய்கிறவன்-
63) அல் ஹய்யு - நித்திய ஜீவனானவன்
64) அல் கய்யும் - என்றும் நிலைத்திருப்பவன்
65) அல் வாஜித் - நினைத்ததை பெறுபவன்
66) அல் மாஜித் - மேன்மையானவன்
67) அல் வாஹித் - தனித்தவன்
68) அல் அஹத் - ஏகன்
69) அஸ்ஸமத் - தேவையற்றவன்
70) அல் காதிர் - ஆற்றலுள்ளவன்
71) அல் முக்ததிர் - மாபெரும் சக்தி உடையவன்
72) அல் முகத்திம் - முற்படுத்தி வைக்கிறவன்
73) அல் முஅக்கிர் - பிற்படுத்தி வைக்கிறவன்
74) அல் அவ்வல் - முதலானவன்
75) அல் ஆகிர் - இறுதியானவன்
76) அல்ளாஹிர் - பகிரங்கமானவன்
77) அல் பாதின் - அந்தரங்கமானவன்
78) அல் வாலீ - அதிகாரமுள்ளவன்
79) அல் முதாஆலீ - மிக்க உயர்ந்தவன்
80) அல் பர்ரு - உபகாரம் செய்கிறவன்
81) அல் தவ்வாப் - தவபாவை ஏற்கிறவன்
82) அல் முன்தகிமு - பழி வாங்குகிறவன்
83) அல் அஃபுவ்வு - மன்னிக்கிறவன்-
84) அர்ரவூஃப் - இரக்க சிந்தையுள்ளவன்
85) மாலிகுல் முல்க் - அரசாட்சிக்குரியவன்
86) துல்ஜலாலி வல்இக்ராம் - மாண்பும் மரியாதையும் உடையவன்
87) அல் முக்ஸித் - நீதியாளன்
88) அல் ஜாமிஃ - ஒன்று சேர்க்கிறவன்-
89) அல் ஙனிய்யு - தேவையற்றவன்
90) அல் முங்னீ - தேவையறச் செய்கிறவன்
91) அல் மானிஃ - தடுக்கிறவன்
92) அள்ளார்ரு - துன்பமுறச் செய்கிறவன்
93) அந்நாபிஃ - பலன் தருகிறவன்
94) அந்நூர் - ஒளிமயமானவன்
95) அல் ஹாதீ - நேர்வழி காட்டுகிறவன்
96) அல் பதீஃ - புதுமையாய்ப் படைக்கிறவன்
97) அல் பாகீ - நிலையானவன்
98) அல் வாரித் - அனந்தர உரிமை கொள்பவன்
99) அர் ரஷீத் - நேர்வழி காட்டுபவன்
100) அஸ்ஸபூர் - மிக்கப் பொறுமையாளன்


Best Regards
'Jumaana' Syed Ali - www.jsyedali.com

Thursday, February 4, 2021

எல்லோரும் போற்றும் யா ரஸுலல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் போற்றும்  யா ரஸுலல்லாஹ் அஸ்ஸலாமு  அலைக்கும் 

அல்லாஹ்வின் தூதாரே  ஸலாம் அலைக்கும்

 

 அல்லாஹ்வின் தூதரே யா முஸ்தபா

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் போற்றும் யா ரசூலுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் போற்றும் யா ரசூலுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்

 

Tuesday, February 2, 2021

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருமணங்கள்

 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருமணங்கள்

 

1 – கதீஜா(ரலி) அவர்கள்

 

அன்னை கதீஜா(ரலி) அவர்கள் கிபி 556ம் ஆண்டு பிறந்தவர்கள்.இவர்களுக்கு தாஹிராபரிசுத்தமானவள் என்ற பெயரும் உண்டு.

 

கதீஜா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் முடிப்பதற்கு முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும்,அவருக்குப்பின் அதீக்பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார்கள். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாக வாழ்ந்து வந்தனர்.   நபியவர்களைத் திருமணம்முடிக்க முன்னர் கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூஹாலா மூலமாக  ஹிந்த்,ஹாலா ஆகிய இரு பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த் என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார்.

 

செல்வ சீமாட்டியாக விளங்கிய இவர்களின் வியாபாரம் சிரியா வரை விரிந்து பரந்து இருந்தது. தனது வியாபாரத்தை நல்ல முறையில் நடத்திய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை மணமுடிக்கிறார்கள்.அப்போது அவர்களின் வயது 40, நபி(ஸல்) அவர்களுக்கு வயது 25

 

இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் இவர்கள்தான்.

 

நபி(ஸல்) அவர்களுக்கும் கதீஜா(ரலி) அவர்களுக்கும் பிறந்த குழந்தைகள்

 

(1)  காஸிம், நபித்துவ வஹி வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்

(2)  அப்துல்லாஹ்(தாஹிர், தையிப்) இவர்களும் நபித்துவ வஹி வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்

(3)  ருகையா(ரலி) – ஹிஜ்ரி 2ம் ஆண்டு மரணித்தார்கள்.

(4)  ஜைனப்(ரலி) – ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மரணித்தார்கள்

(5)  உம்மு குல்ஸூம்(ரலி) ஹிஜ்ரி 9ம் ஆண்டு மரணித்தார்கள். மேற்கண்ட அனைவரும் நபிகள் நாயகம்(ஸல்) உயிரோடு இருக்கும் போதே மரணித்துவிட்டார்கள்

 

(6)  பாத்திமா(ரலி) – இவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணித்து ஆறுமாதம் கழித்து மரணித்தார்கள்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை)  ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].

மேலும் முழு கட்டுரை  படிக்க இதனை கிளிக் செய்யுங்கள்  

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பன்னிரெண்டு மனைவியர்கள் இருந்தார்கள். 1) கதீஜா பின்த் குவைலித் (ரழி), 2) ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரழி), 3) ஸவ்தா (ரழி) 4) ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி), 5) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி), 6) ஸைனப் பின்த் குஸைமா (ரழி), 7) உம்மு  ஸலமா (ரழி), 8) ஜுவைரிய்யா  (ரழி), 9) உம்மு  ஹபீபா (ரழி), 10) ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரழி), 11) மைமூனா (ரழி), 12) மாரியத்துல் கிப்திய்யா (ரழி),  ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆவார்கள். ஆதார நூல்கள்: ஃபத்ஹுல் பாரீ & தபக்காத் இப்னு ஸஅத்.

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....


 அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....

பாடல் பாடியவர்  : தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்