ஹழ்ரத் உமர் பாருக் ரலியல்லாஹு அன்ஹு
இவர்களுக்கு நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வம்சமாகிய குரைஷி வம்சமே. கத்தாப் என்பது இவர்களது தகப்பனின் பெயர். அபூ ஹப்ஸ் என்பது காரணப் பெயர். பாருக் என்பது சிறப்புப்பெயர். இவர்கள் யானை வருடத்துக்கு 13 வருடங்களின் பின் பிறந்தார்கள்.
பதவி யேற்றல்
முதலாம் கலீபா அவர்கள் நோயுற்றிருக்கும் பொழுதே மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். ஓர் உறுதி மொழிப் பத்திரம் எழுதுவித்தார்கள். முன்பாடத்திற் கூறியதுபோல் புத்திமதிகளும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) க்குக் கூறினார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னரே இவர்கள்
ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் 23-ந் தேதி (கி. பி: 633 ஆகஸ்ட் 23ந் தேதி) பதவியேற்றார்கள்.
பதவியேற்றபின் மிம்பரில் (பிரசங்கமேடை) ஏறி “அரபிகள், தன்னை மேய்ப்பவுனுக்கு வழிபடும் ஒட்டகம் போல்வர்.
அதை எங்கு கொண்டு செல்கின்றான் என்பதைக் கவனித்தல் அவனது கடமையே. அதை அவன் சரியாகச் செய்ய
வேண்டும். கஃபாவின் நாயன்மீது ஆணையாக, நான் உங்களை நல்வழியில் கொண்டு செல்வேன்
என உறுதி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.