Thursday, August 23, 2018

இந்து கோவிலில் நடந்த பெருநாள் தொழுகை....

கேரள பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் திருச்சூர் மாவட்ட கொச்சுகடவு ஜமாஅத் ஜும்ஆ பள்ளிவாசல் முற்றிலும் சேதமானதுடன் பள்ளி வாசல் செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது..
பெரும்பாலான வீடுகளை காலி செய்துவிட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்த இடமில்லாமல் கவலைப்படும் தகவல் கேள்விப்பட்ட எரவத்தூர் புரப்பள்ளிக்காவு ரத்னேஷ்வரி கோவில் நிர்வாகம் கோவில் வளாகத்தில் உள்ள பஜனை ஹாலில் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதுடன் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்..
இந்த மனித நல்லிணக்கம் சார்ந்த உயரிய செயலுக்கு காரணமாக இருந்த கோவில் நிர்வாகி பி. கே. பாபு வுக்கு பாராட்டுகள்...
Colachel Azheem

பண ஆறுதல்.. கூடவே கொஞ்சம்
மன ஆறுதலும்...
************************************
கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்ததுடன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பல்வேறு கவலைகளுடன் மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக தூக்கம் வராது முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி தைரியமூட்டும் மகத்தான சேவையை செய்து வருகின்றனர் ஜமாஅத்தே இஸ்லாமியின் மகளிர் பிரிவு...
நிவாரணம் மற்றும் பல்வேறு வகையான உதவிகளை வழங்குபவர்கள் மத்தியில், #GIO
Girls Islamic Organisation வாலண்டியர்கள் பெண்கள் தங்கியுள்ள முகாம்களில் வாடிய முகத்தோடு, தங்களது இடம், தொழில் உட்பட சகலமும் இழந்து கவலையில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்பிக்கையூட்டி வருகின்றனர்...


Colachel Azheem

No comments: