Monday, August 6, 2018

கலைஞருடன்....

கலைஞரின் மருமகன் செல்வத்திடம் எனக்கு நெருங்கிய பழக்கம்
(கல்லூரியில் உடன் puc லிருந்து B.L வரை படித்தவர்.கூடவே இருந்தவர் ) அதனால் நான் முரசொலி அலுவலகம் செல்வதுண்டு .

கலைஞரின் நேரம் போதாமையால் தினமும் தம்பிக்கு எழுதும் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது ..இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை


கலைஞரை ஆசிரியர் என்று முரசொலி அலுவலகத்தில் அழைப்பார்கள்
கலைஞர் வீட்டுக்கு பலமுறை நான் சென்றிருக்கின்றேன் .லயோலாவில் நான் படிக்கும் காலத்தில் நாங்கள் சிலர் அவர் முன் அவரது வீட்டில் அமர்ந்திருக்கும்போது எங்கள் ஆலோசனையை கேட்டதும் வியப்பாக இருந்தது

எனது மகன் திருமணதிற்கு கலைஞரை அழைத்தபோது அவரது மருமகன் சொன்னது மயிலாடுதுறை கழக அனுமதியோடு வரவேண்டும் அத்துடன் கழக நண்பர்கள் அதிகம் வருவார்கள் திருமணம் பெரிய செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகுமென்றார் .
அதனால் அவர் மருமகன் செல்வம் தனது நண்பர்களுடன் திருமணதிற்கு வந்தார்

கடந்த மாதம் கலைஞர் அவர்களோடு அவரது இல்லத்தில் கலைஞருடன் படம் பிடித்துக்கொள்ள அவரது மருமகனிடன் விருப்பம் தெரிவித்தேன் .அவர் சென்னை வரச்சொல்லி தெரிவித்தார் .ஆனால் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போகமுடியவில்ல .அது எனக்கு பெரிய இழப்பாகப் போனது

காஞ்சித் தலைவன் படப்பிடிப்புக்கு சென்றோம் .
MGR அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார் .அவர் எங்களை வெளியே இருக்கச் சொன்னார் .நாங்கள் வெளியே நிற்பதை பார்த்த கலைஞர் 'ஏன் வெளியே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள்' என்று அழைத்துப் போனார் .வெளியே நின்றவர்கள் நானும் முரசொலி செல்வமும் . MGR அவர்கள் சிரித்த முகத்துடன் எங்களைப் பார்த்த பின்பு தனது நடிப்பை தொடர்ந்தார்.
#அனுபவங்கள்

- முகம்மது அலிMohamed Ali

No comments: